இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க! தலைநகரை அலறவிட்ட சிறுவர்கள்! சென்னையில் நடந்த பயங்கர சம்பவம்!

By vinoth kumar  |  First Published Jul 17, 2024, 11:13 AM IST

சென்னை கொருக்குப்பேட்டை கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாபு (22). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நாய் பிடிக்கும் வேலை பார்த்து வந்தார்.


சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே மது போதையில் இருந்த நபரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை கொருக்குப்பேட்டை கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாபு (22). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நாய் பிடிக்கும் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியப்பா மகன் மோகன்ராஜ் (37) என்பவரும்  சேர்ந்து தண்டையார்பேட்டை ரயில்வே தண்டவாளம் அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: சிறுமிகளை மாறி மாறி சீரழித்த 15 பேர்! கோர்ட் வழங்கிய மறக்க முடியாத தண்டனை என்ன தெரியுமா? கதறிய குடும்பத்தினர்!

அப்போது காற்றாடி விட்டப்படி சத்தம் போட்டுக்கொண்டிருந்த சிறுவர்களை இருவரும் விரட்டியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து சென்ற சிறுவர்கள் நண்பர்கள் சிலரை அழைத்து வந்து தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அலெக்ஸ்பாபு மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க:  ஃபர்ஸ்ட் அட்டெம்ட்டில் மிஸ்ஸான கணவர்! 2வது முறையாக ஸ்கெட்ச் போட்டு கதையை முடித்த மனைவி! கள்ளக்காதலால் பயங்கரம்

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அலெக்ஸ்பாபு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மோகன்ராஜ்  படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  3 சிறுவர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். 

click me!