கோவை மேட்டுப்பாளையம் அருகே இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் நாலரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் நாலரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் மதினா நகர் ஜங்ஷன் அருகே கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் சில காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: தாராபுரம் இன்ஸ்பெக்டர் மாயம்.. குடும்ப பிரச்னையா? சமூக வலைத்தளங்களில் வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை.!
அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பிடிப்பட்டது. இதை அடுத்து மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சிஜி (எ) ராஜு ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கே.ஜி சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குமட்டிபதி பிரிவு எல்லை மாரியம்மன் கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர் உதயசந்திரன் மற்றும் சில காவல்துறையினர் வாகனசோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதல்.. இளைஞரின் அந்தரங்க பகுதியில் பைப்பை சொருகி தாக்கிய ‘பகீர்’ சம்பவம் !
அப்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். போதைபொருளின் புழக்கத்தை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகிறது கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.