தாராபுரம் இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆடியோ வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி செல்லம் நேற்று இரவு முதல் காணவில்லை என்று சமூக வலைதளங்களில் ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோவில், இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு 8: 45 மணிக்கு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வெள்ளை நிற மாருதி 800 வெள்ளை நிற TN. 7483 காரில் வந்ததாகவும் அதன் பிறகு அந்த கார் ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்ததார்.
undefined
திண்டுக்கல் பகுதியில் சென்ற போது கார் மர்மமானதுடன் அவரது தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சக தோழியான மற்றொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதனா, சக போலீசாருக்கு வாட்ஸ் அப் மூலம் அவரது புகைப்படத்தை அனுப்பி கண்டுபிடிக்க வேண்டும் என பதிவிட்டு வந்தார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் செல்லம் கிடைத்துவிட்டார் என்று மற்றொரு பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய தாராபுரம் டி.எஸ்.பி தனராசு, மயமானதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் செல்லம் குடும்ப பிரச்னை காரணமாக விடுப்பு எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து மேல் தகவல் எதுவும் தெரியவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!