சீனியர் மாணவர் ராகிங் செய்வதை சகித்துக்கொள்ள முடியாமல் மயக்க ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயன்ற மருத்துவ மாணவி தராவத் ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து தொல்லை கொடுத்து வந்ததால் மனம் நொந்து மயக்க ஊசி போட்டுக்கொண்ட மருத்துவ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
எம்பிபிஎஸ் படிப்பை முடித்திருந்த ப்ரீத்தி கடந்த ஆண்டு காக்கித்தியா மருத்துவ கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். மருத்துவப் பயிற்சிப் பணிக்காக எம்ஜிஎம் மருத்துவமனையின் அவசர அறுவை சிகிச்சை பிரிவில் ப்ரீத்தி பணியில் இருந்தார்.
நாகையில் அரசு கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு
முகமது அலி சையிப் என்ற சீனியர் மருத்துவ மாணவர் ப்ரீத்தியை தொடர்ந்து ராக்கிங் செய்து தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இதுபற்றி ப்ரீத்தி தன் தந்தை நரேந்திராவிடம் கூறினார். தந்தை நரேந்திரா பிப்ரவரி 20ஆம் தேதி இதுபற்றி கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் மற்றும் மயக்கவியல் துறையின் தலைவர் நாகார்ஜுனா ஆகியோரிடம் புகார் அளித்தார். கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் மறுநாளே சையிப் மற்றும் ப்ரீத்தி இருவரையும் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.
கோபம் அடைந்த சையிப் மீண்டும் தன்னைப்பற்றி புகார் கொடுக்கக் கூடாது என்று ப்ரீத்தியை மிரட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ப்ரீத்தி பிப்ரவரி 22ஆம் தேதி மயக்க ஊசி போட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபரேஷன் தியேட்டரில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியா அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆணழகன் போட்டி: பிரட் தொண்டையில் சிக்கி 21 வயது பாடிபில்டர் பலி
அப்போதுதான் அவர் அனஸ்தீசியா மயக்கம் ஊசியை அதிகமாகப் போட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. கவலைக்கிடமான நிலையில் இருந்த ப்ரீத்தி மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத் நிம்ஸ் (NIMS) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். வென்டிலேட்டர் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக நிம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர். சத்யநாராயணா தெரிவித்தார்.
வாராங்கல் காவல்துறையினர் சையீப்பை கைது செய்து எஸ்சி எஸ்டி பிரிவினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த ப்ரீத்தி தெலுங்கானாவில் உள்ள பஜ்ரங்கா லம்பாடா என்ற சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை நரேந்திரா ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிகிறார்.
எவ்வளவு அறிவுரை சொல்லியும் அடங்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கதறிய கணவர்.. கைவிட மறுத்த மனைவி.!