இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதல்.. இளைஞரின் அந்தரங்க பகுதியில் பைப்பை சொருகி தாக்கிய ‘பகீர்’ சம்பவம் !

By Raghupati R  |  First Published Feb 28, 2023, 7:46 PM IST

இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அந்தரங்க பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காஜியாபாத் அருகே உள்ள சிஹானி கேட் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 19 வயது இளைஞன் பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியபோது, பாதிக்கப்பட்ட விஜய் என்பவர்  சிஹானி கேட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராகேஷ் மார்க்கில் உள்ள பெட்ரோல் பம்பில் கார் கிளீனராக பணிபுரிகிறார். குற்றம் சாட்டப்பட்ட மோஹித்துடன் விஜய் சனிக்கிழமை வாக்குவாதம் செய்தார்.

Tap to resize

Latest Videos

வாய் தகராறு விரைவில் வன்முறையாக மாறியது. மோஹித் விஜய்யை தாக்கினார். பின்னர் அவர் தனது அந்தரங்க பகுதியில் கம்பிரசட் ஏர் பைப்பை சொருகி வால்வை திறந்தார். விஜயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!

கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் அலோக் துபே, நாங்கள் ஐபிசியின் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம். குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவத்திலிருந்து தலைமறைவாகிவிட்டார், அவரைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

click me!