
டெல்லியில் நடைபெற்ற வினோதமான வழிப்பறி சம்பவத்தில் ஒரு தம்பதியரிடம் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் அவர்களிடம் 20 ரூபாய் நோட்டைத் தவிர வேறு எதுவும் கிடைக்காததால் தங்களிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
கிழக்கு டெல்லியின் ஷாதாராவில் உள்ள ஃபார்ஷ் பஜார் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு தம்பதியை வழிமறித்து நிறுத்துகின்றனர். ஹெல்மெட் அணிந்திருந்தவர்களில் ஒருவர் அவர்களிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்பதையும் பின்னர், அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை சோதனையிடத் தொடங்குவதையும் காண முடிகிறது.
வந்தே பாரத் ரயில் கழிப்பறைக்குள் அலப்பறை! மர்ம நபரை கதவை உடைத்து வெளியே இழுத்த ரயில்வே!
எவ்வளவு தேடியும் ஒரு 20 ரூபாய் நோட்டைத் தவிர எதுவும் கிடைக்காகவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அந்தத் தம்பதியின் கையில் எதையோ கொடுக்கின்றனர். பின்னர் இந்தச் சம்பவம் பற்றி போலீசார் விசாரித்தபோது, கொள்ளையடிக்க வந்தவர்கள் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றனர் எனக் கூறியுள்ளனர்.
அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களில் இந்தச் சம்பவம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை போலீசார் ஆய்வு செய்து இரண்டு கொள்ளையர்களையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் இருவரும் தேவ் வர்மா மற்றும் ஹர்ஷ் ராஜ்புத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேவ் வர்மா மற்றும் ஹர்ஷ் ராஜ்புத் இருவரும் தனியார நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருபவர்கள் என்றும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. யூடியூப்பில் உள்ள கேங்க்ஸ்டர் நீரஜ் பவானாவின் வீடியோக்களால் கவரப்பட்டு, அவரது குழுவில் சேர விரும்பியதாக இருவரும் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கொடுத்த கூகுள்! காரணம் இதுதானாம்!