பெண்கள் விடுதியில் குளியல் அறைக்குள் நுழைந்த இளைஞன்.. பிறகு நடந்த படு பயங்கர சம்பவம்..

Published : Jun 15, 2022, 01:44 PM IST
 பெண்கள் விடுதியில் குளியல் அறைக்குள் நுழைந்த இளைஞன்.. பிறகு நடந்த படு பயங்கர சம்பவம்..

சுருக்கம்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள் குளியல் அறையில் இளைஞர் ஒருவர் நுழைந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். 

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள் குளியல் அறையில் இளைஞர் ஒருவர் நுழைந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் அந்த இளைஞரை ரத்த காயங்களுடன் வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தாம்பரத்தில் தனியார் மகளிர் விடுதியில்  நேபாளத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் நேற்று இரவு திடீரென பெண்கள் விடுதிக்குள் சென்று அவர்களின் குளியல் அறைக்குள் நுழைந்தார். இதைப் பார்த்து அங்கிருந்த பெண்கள் அலறி ஓடினர், உடனே விடுதி காப்பாளர் அந்த நபரை பிடிக்க முயற்சித்தார் ஆனால் அந்த இளைஞர் மாடியில் முதல் தளத்திலிருந்து குதித்து தப்பி செல்ல முயன்றார். அப்போது அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு வந்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். அதில் அந்த இளைஞருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தாம்பரம் போலீசிடம் நடந்து தகவலை கூறினர், பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை பிடித்து சென்றனர்.

அது இரவு நேரம் என்பதால் காவல் நிலைய ஆய்வாளர். எதற்காக இவரை அழைத்து வந்தீர்கள் என்றும், அந்த இளைஞரை எங்கேயாவது அனுப்பிவையுங்கள் என போலீசாரை திட்டியதாக தெரிகிறது. அதனால் அந்த நபர் யார்? எதற்காக மகளிர் விடுதிக்கு சென்றார் என்பது குறித்தெல்லாம் கூட விசாரிக்காமல் ரத்த காயங்களுடன் இருந்த அந்த  இளைஞருக்கு சிகிச்சை கூட வழங்காமல் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று தங்கள் எல்லையை தாண்டி பழைய பெருங்களத்தூர் பகுதியில் விட்டுச் சென்றனர். அந்த நபர் ஏற்கனவே காயமடைந்திருந்ததாலும், அவர் பொது மக்களை ஆட்ச்சுறுத்துவது போல் இருந்தாலும் அங்கிருந்தவர்கள் அந்த இளைஞர் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், தாம்பரம் போலீசார் தன்னை இங்கு விட்டுச் சென்றதாக அந்த இளைசர் கூறினார்.

உடனே இது குறித்து பெருங்களத்தூர் போலீசார் தாம்பரம் போலீசார் தண்டை பிடித்து இங்கு விட்டுச் சென்றதாக அவர் கூறினார் உடனே அதுகுறித்து பெருங்களத்தூர் போலீசார் தாம்பரம் போலீசாரிடம் விசாரித்தனர். எந்த போலீசார் அந்த இளைசரை விட்டுச் சென்றாரோ அதே போலீசார் அந்த நபரை அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றார். நேபாளத்தை  சேர்ந்தவர் மகளிர் விடுதிக்கு சென்று ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!