கஞ்சா போதையில் அட்டகாசம்.. போலீஸ், பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டிய பிரபல ரவுடியின் தம்பி தப்பியோட்டம்.!

Published : Jun 15, 2022, 09:47 AM IST
கஞ்சா போதையில் அட்டகாசம்.. போலீஸ், பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டிய பிரபல ரவுடியின் தம்பி தப்பியோட்டம்.!

சுருக்கம்

சென்னை திருமங்கலம் பாடிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் கஞ்சத போதையில் ஒரு வாலிபர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டிக்கொண்டிருந்தார். இதுபற்றி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு ததகவல் தெரிவித்தனர். 

சென்னையில் கஞ்சா போதையில் ரவுடியின்  சகோதரர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் போலீசாரை கத்தி முனையில் மிரட்டும் வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கஞ்சா போதை

சென்னை திருமங்கலம் பாடிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் கஞ்சத போதையில் ஒரு வாலிபர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டிக்கொண்டிருந்தார். இதுபற்றி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு ததகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த திருமங்கலம் போலீசார் அங்கு கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டு வந்த வாலிபரை பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து வர முயன்றனர். 

கத்திமுனையில் மிரட்டிய இளைஞர்

ஆனால், அந்த வாலிபர் வர மறுத்ததுடன் போலீசாரையும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து, அவரை போலீசார் சுற்றிவளைத்த போது கத்திமுனையில் போலீசாரை மிரட்டிவிட்டு அந்த வாலிபர் தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார்  நடத்திய விசாரணையில் தப்பியோடிய நபர் ரவுடி நந்தா என்பவரின் சகோதரர் யுவராஜ் என்று தெரியவந்தது. யுவராஜ் திருமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்களிடம் தகராறு செய்து வந்தது தெரிவந்துள்ளது.

வைரல் வீடியோ

இதனையடுத்து, கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட யுவராஜை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கத்தியைக் காட்டி பொதுமக்கள் போலீசார் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!