திருட சென்ற இடத்தில் பொருட்கள் இல்லாததால் ஆத்திரம்.. கஞ்சா போதையில் இளம்பெண் மீது பாய்ந்து நாசம் செய்த திருடன்

Published : May 15, 2022, 12:06 PM ISTUpdated : May 15, 2022, 12:08 PM IST
திருட சென்ற இடத்தில் பொருட்கள் இல்லாததால் ஆத்திரம்.. கஞ்சா போதையில் இளம்பெண் மீது பாய்ந்து நாசம் செய்த திருடன்

சுருக்கம்

அந்த இளம் பெண் வீட்டிற்குள் நள்ளிரவில் மர்ம நபர் திருட வந்துள்ளார். ஆனால், வீட்டில் திருடிச் செல்லும் அளவுக்கு எந்த பொருட்களும் இல்லாமல் போனதால் ஆத்திரமடைந்துள்ளார். இதனையடுத்து, வீட்டில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணை தாக்கி அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

சென்னையை அடுத்த குன்றத்தூரில் கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த திருடன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் 22 வயது இளம்பெண் ஒருவர், தந்தை இல்லாத நிலையில் தனது  தாய் சகோதரியுடன் வசித்து வந்தார். இந்த சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தாயாரும், சகோதரியும் வெளியூர் சென்ற நிலையில், அந்த இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, அந்த இளம் பெண் வீட்டிற்குள் நள்ளிரவில் மர்ம நபர் திருட வந்துள்ளார். ஆனால், வீட்டில் திருடிச் செல்லும் அளவுக்கு எந்த பொருட்களும் இல்லாமல் போனதால் ஆத்திரமடைந்துள்ளார். இதனையடுத்து, வீட்டில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணை தாக்கி அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த திருடன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த இளம்பெண் குன்றத்தூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 

அவ்வாறு சேகரிக்கப்பட்ட புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காண்பித்தபோது குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் (19), என்பவரின் புகைப்படத்தை அவர் உறுதி செய்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சதீஷ் என்பது தெரியவந்தது. அந்த நபரை குன்றத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் கஞ்சா போதையில் இருந்த திருடன் அங்கேயே தூங்கிவிட்டு அதிகாலையில் தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?