நிர்வாண நிலையில் இறந்த தாயின் உடல்...! அழுகிய உடலோடு 3 நாட்கள் தங்கியிருந்த மகன்..? அதிர்ச்சி சம்பவம்

Published : May 15, 2022, 09:36 AM ISTUpdated : May 15, 2022, 09:42 AM IST
நிர்வாண நிலையில் இறந்த தாயின் உடல்...! அழுகிய உடலோடு 3 நாட்கள் தங்கியிருந்த மகன்..? அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

இறந்த தாயின் நிர்வாண உடலோடு மகன் 3 நாட்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையில், போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  

வீட்டில் இருந்து வெளியான துர்நாற்றம்

பல்வேறு சைகோ கொலையாளிகளை பற்றி கேள்வி பட்டிருப்போம்.. அது போன்ற ஒரு சம்பவம் தான் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மைத்திரி நகரில் உள்ள மல்காஜ்கிரி அடுக்குமாடி குடியிருப்பில் வாணி(55) என்பவர் தனது 22 வயதுடைய மகன் சாய் உடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 3 தினங்களாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனையடுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியே வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் வாணியின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் வீட்டின் கதவை யாரும் திறக்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அருகில் உள்ளவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தாயின் நிர்வாண உடலோடு மகன்

இதனையடுத்து அந்த வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வாணி நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரின் உடலின் அருகில் வாணியன் மகன் உட்கார்ந்து இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வாணியின் அழுகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து  போலீசார் நடத்திய விசாரணையில் வாணிக்கும் அவரது மகன் சாய்க்கும் தொடர்ந்து பிரச்சனை ஏற்படும் என அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். வாணியின் உடல் நிர்வாண நிலையில் இருந்த காரணத்தால் மரணத்தில் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் சாயை தடுப்பு காவலில் வைத்துள்ளனர். வாணி இறந்து 3 நாட்கள் ஆகியுள்ளதால் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளதால் உடலில் காயங்களை இருப்பதை கண்டறிய முடியவில்லையென போலீசார் தெரிவித்துள்ளனர்.

மன நிலை பாதிப்பா ? 

பிரதே பரிசோதனை முடிவில் வாணி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?  அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா என தெரிய வரும் என போலீசார் கூறினர்.மேலும் . மேலும் வாணியின் மகன் சாய்க்கு மனநிலை பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.  இந்தநிலையில் இறந்த தாயின் உடலோடு மகன் 3 நாட்கள் தங்கியிருந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

உல்லாசத்தின் போது வளைச்சு வளைச்சு ஆபாச படம் எடுத்து ஓயாத டார்ச்சர்.. வாலிபரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கொலைக்கான பின்னணி.. எதிர்பாராத ட்விஸ்ட்.. போலீஸ் அதிர்ச்சி.!
முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?