திமுக கவுன்சிலர் கணவர் தான் என் சாவிற்கு காரணம்.. வீடியோ வெளியிட்டு எடுத்த விபரீத முடிவு..

Published : May 14, 2022, 03:31 PM ISTUpdated : May 14, 2022, 03:32 PM IST
திமுக கவுன்சிலர் கணவர் தான் என் சாவிற்கு காரணம்.. வீடியோ வெளியிட்டு எடுத்த விபரீத முடிவு..

சுருக்கம்

ஈரோட்டில் திமுக கவுன்சிலர் கணவரிடம் லாட்டரி வாங்கி ரூ.62 லட்சம் பணத்தை இழந்த நூல் வியாபாரி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த 56 வயதாகும் ராதாகிருஷ்ணன், நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள். ஒரு மகளுக்கு திருமணமாகி குமாரபாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இன்னொரு மகள், கணவன் இறந்ததால் தாய், தந்தையுடன் வசித்து வருகிறார்.

தொடக்கத்தில் தறிபட்டறை வைத்து தொழில் செய்து வந்த ராதாகிருஷ்ணன், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் வியாபாரம் செய்யும் தொழிலுக்கு மாறியுள்ளார். இவருக்கு லாட்டரி  சீட்டு அதிகளவும் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் தான், 
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலர்‌ கீதாஞ்சலி என்பவரின்‌ கணவர்‌ செந்தில்‌ குமாரிடம்‌ லாட்டரி வாங்கி வந்துள்ளார்‌.

மேலும் படிக்க: நல்லவன்னு நம்பி ஆடைகளை அவிழ்த்து வீடியோ காலில் நிர்வாணமாக நின்ற குடும்ப பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!

இதனிடையே அவரிடம் லாட்டரி வாங்கி கிட்டதட்ட ரூ. 62 லட்சம் வரை இழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இறப்பதற்கு முன் தனது சாவிற்கு காரணம் திமுக வார்டு கவுன்சிலர் கணவர் தான் என்று பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.  அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை நஷ்டயீடாக பெற்று தனத குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என கூறியுள்ளார். லாட்டரி சீட்டால் ரூ.62 லட்சம் பணத்தை இழந்துவிட்டதாகவும் இனிமேல் உயிருடன் இருந்தால் இன்னும் பணத்தை இழக்கக்கூடும் எனவும் உருக்கமாக பேசி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அவர் அந்த வீடியோவில், ஈரோட்டில் பல குடும்பங்கள் லாட்டரியால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே லாட்டரியை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கருங்கல்பாளையத்தை சேர்ந்த கவுன்சிலர்‌ கீதாஞ்சலியின்‌ கணவர்‌ செந்தில்குமாரிடம்‌ லாட்டரி வாங்கி 62 லட்சம்‌ ரூபாய்‌ இழந்ததாகவும்‌, உயிருடன்‌ இருந்தால்‌ இன்னும்‌ பணத்தை இழந்து விடுவேன்‌ என தெரிவித்துள்ளார்‌.

இதுக்குறித்து, ராதாகிருஷ்ணன்‌ மனைவி மாலதி அளித்த புகாரின்‌ பேரில்‌ ஈரோடு வடக்கு காவல்‌நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்‌. தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை ஈரோட்டில் படுஜோராக நடப்பதாகவும் லாட்டரி விற்பனை தடை சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை தொடர்ந்து கொண்ட இருக்கிறது. இதனால் பலரும் தங்களது பணத்தை இதில் இழந்து, வாழ்க்கை தொலைந்து வருகின்றனர். இந்நிலையில் தான்‌ லாட்டரியால்‌ பணத்தை இழந்து, நூல்‌ வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: தனி அறையில் உறங்கிய கல்லூரி மாணவி.. நள்ளிரவில் உள்ளே நுழைந்து உல்லாசம்.. 19 வயது இளைஞர் வெறித்தனம்.

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!