உன் தங்கச்சி எப்படி குளிக்கிறா பாரு.. பெண்ணின் அண்ணனுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞன்.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2022, 3:17 PM IST
Highlights

தங்கையின் ஆபாச படத்தை அந்தப்பெண்ணின் அண்ணனுக்கு அனுப்பி வைத்து மிரட்டி 2 லட்சம் பணம் கேட்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடந்துள்ளது.

தங்கையின் ஆபாச படத்தை அந்தப்பெண்ணின் அண்ணனுக்கு அனுப்பி வைத்து மிரட்டி 2 லட்சம் பணம் கேட்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடந்துள்ளது.

சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. செல்போன் பேஸ்புக் ட்விட்டர் போன்ற தொழில்நுட்பங்கள்  வெகுஜன  மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் அறிவியல் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் இத்தொழில்நுட்பங்களை சில  குரூர மனம் படைத்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தி பிறரிடமிருந்து பணம் பறிப்பது, பிறரின் தகவல்களை திருடி மோசடி செய்வது, மற்றவர்களின் புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் திருடி ஆபாசமாக சித்தரிப்பது போன்ற எண்ணற்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிக அளவில் வெளிச்சத்துக்கு வருகிறது.

இந்த வரிசையில் வாட்ஸ்அப் மூலம் ஒரு பெண் குளிக்கும் வீடியோவை அந்தப்பெண்ணின் அண்ணனுக்கு அனுப்பி வைத்து மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த இளைஞன் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு தாமரைபுலம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மகன் வாட்சப் எண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து புகைப்படம் ஒன்று வந்தது. அது அவரின் தங்கையின் ஆபாச படம் இருந்தது. அதன் பிறகு அவரது தங்கை குளிக்கும் வீடியோவும் வந்த தாக தெரிகிறது.  அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு  பேசினார். எதிர்முனையில் பேசிய அந்த நபர் என்னிடம் உன் தங்கையின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளது.

உன் தங்கை குளிக்கும் வீடியோ படமும் இருக்கிறது. இவற்றையெல்லாம் அழிக்க வேண்டும் என்றால் எனக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என கூறி மிரட்டினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். கருணாநிதியின் மகனுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்பியது சென்னை காலடிப்பேட்டை வடக்கு  மாட தெருவை சேர்ந்த மகேஷ் என்று தெரிந்தது. இதையடுத்து சென்னை விரைந்து வந்த நாகை போலீசார் மகேஷை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

click me!