நோயாளியை குணப்படுத்த சிங்கப்பூர் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை ருத்ர சாமியாரை சிங்கப்பூர் ஹல்க் சாமியார் நிர்வாணபடுத்தி அடித்து துவைத்துள்ளே வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நோயாளியை குணப்படுத்த சிங்கப்பூர் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை ருத்ர சாமியாரை சிங்கப்பூர் ஹல்க் சாமியார் நிர்வாணபடுத்தி அடித்து துவைத்துள்ளே வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒட்டு துணி இல்லாமல் ஹல்க் சாமியாரிடம் இருந்து பட்டுக்கோட்டை ருத்ர சாமியார் தப்பி ஓடும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோவில்களை விட போலீசாமியார்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. ஆன்மீகம், கடவுள் பக்தி என்பதை எல்லாம் தாண்டி கல்லா கட்டும் வேலையாக சாமியார் தொழில் மாறியுள்ளது, தமிழகத்தில் எண்ணற்ற போலி சாமியார்கள் புற்றீசல் போல அணிவகுத்து வருகின்றனர், இல்லாத பொல்லாததைக் கூறி மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி பணம் பறிப்பது இவர்களின் பிரதான வேலையாக இருந்து வருகிறது.
சில நேரங்களில் பெண்களை குறிவைத்து தங்களது உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளும் காரியங்களிலும் சாமியார்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல பல சர்ச்சைகளுக்கு பெயர்போன பட்டுக்கோட்டை மக்களிடம் பிரசித்தி பெற்று, ருத்ர சித்ராக்கா வளம்வருபவர் ராஜ்குமார்... பெண்களின் நோயை கட்டையால் குத்தியே குணப்படுத்தி விடுவதாக கூறி சாமியார் தொழிலை படி ஜரூராக செய்து வருகிறார் அவர். சாமியாராக அவதாரமெடுத்த ஒரு சில ஆண்டுகளிலேயே பட்டுக்கோட்டை வட்டாரத்தில் ராஜ்குமார் பெயர் பிரசித்தமானது.
இதையும் படியுங்கள்: உல்லாசத்துக்கு மறுப்பு? ரிசாட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை.. முக்கிய பாஜக தலைவரின் மகன் சிக்கினார்..!
வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட பட்டுக்கோட்டை ருத்ரா சாமியார் ராஜ்குமாரின் பக்தர்களாக உள்ளனர். பாதம் தரையில் கூட படக்கூடாது என மலர்தூவி வரவேற்று அவரை கடவுள் போல அவரது பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த 11ஆம் தேதி சிங்கப்பூரை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது சகோதரரின் உடல் கோளாறை சரிசெய்ய தனது சொந்த செலவில் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். போன இடத்தில் சிங்கப்பூரை சேர்ந்த ஹல்க் சாமியார் அங்கு ஆல்ரெடி அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்த நிலையில் விஷயம் விவகாரமாகிவிட்டது.
இதையும் படியுங்கள்: உங்க அம்மா என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தன் கூட போயிட்டா! நீ வா! கள்ளக்காதலியின் மகன், மகளையும் சீரழித்த கொடூரன்
அங்கு நம்மூர் ருத்ர சாமியாருக்கும்- சிங்கப்பூருக்கு சாமியாருக்கும் இடையே ஒரிஜினல் சாமியார் யார் என்ற சண்டை ஏற்பட்டுள்ளது, அப்போதுதான் சிங்கப்பூர் சாமியார் பட்டுக்கோட்டை ருத்ர சாமியாரை கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கி இழுத்துப் பிடித்துக் கொண்டு, என்னை பார் என் கண்ணைப் பார் என உலுக்கு உலுக்கினார். அதில் பட்டுக்கோட்டை சாமியார் வெலவெலத்துப் போனார், அங்கிருந்த பக்தை ஒருவர் கதவைத் திறந்து விட ஹல்க் சாமியாரின் பிடியிலிருந்து பட்டுக்கோட்டை சாமியார் எப்படியோ தப்பினார்.
யார் என்று காட்டுகிறேன் பார் என்று ஹல்க் சாமியாருக்கு மிரட்டல் விடுத்த படியே பட்டுக்கோட்டை சாமியார் வெளியேற, படார் என சிங்கப்பூர் சாமியார் வேட்டியை உருவினார். அதில் ஒட்டு துணியில்லாமல் நிர்வாண கோலத்திலேயே காரில் ஏறி தப்பினார் பட்டுக்கோட்டை சாமியார். பிறகு ஹல்க் சாமியார் செய்த கடுமை குறித்து சிங்கப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில்தான் தப்பித்தோம் பிழைத்தோம் என 15ஆம் தேதி தமிழகம் திரும்பினார் பட்டுக் கோட்டை சாமியார்.
சிங்கப்பூர் சம்பவம் யாருக்கும் தெரியாது என பட்டுக்கோட்டை சாமியார் நினைத்திருந்த நிலையில் சிங்கப்பூர் ஹல்க் சாமியாரின் பக்தர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை சாமியாரின் ஆஸ்தான பக்தர்கள் ஆனைவரும் அந்த வீடியோ காட்சிகளை பார்த்து நம்ம சித்தருக்கே இந்த கதியா என நிலைகுலைந்து போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.