கோவை, திருப்பூர், ஈரோட்டில் அதிரடிப்படை குவிப்பு.. கொங்குவில் பதற்றம்.?? பெட்ரோல் குண்டு வீசியது யார்.?

Published : Sep 24, 2022, 11:42 AM IST
 கோவை,  திருப்பூர், ஈரோட்டில் அதிரடிப்படை குவிப்பு.. கொங்குவில் பதற்றம்.?? பெட்ரோல் குண்டு வீசியது யார்.?

சுருக்கம்

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சால் கோவையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் அங்கு அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவை,  திருப்பூர், ஈரோடு பகுதிகளில் பரபரப்பு அதிகரித்துள்ளது.  

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சால் கோவையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் அங்கு அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவை,  திருப்பூர், ஈரோடு பகுதிகளில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி அஸ்ஸாம் உள்ளிட்ட 15க்கும்  மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலர்கள் மற்றும் அது தொடர்புடைய நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர். 

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தல், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை அதில் சேர தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் நூற்றுக்கும் அதிகமான நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைகளுக்கு பல்வேறு அரசியல் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள்: மக்கள் ஆதரவுடன் வளரும் இசுலாமிய அமைப்புகளை குறிவைப்பதை சங்பரிவார் கும்பல் கைவிட வேண்டும்.. கொதிக்கும் வைகோ.

சிறுபான்மையினரை திட்டமிட்டு ஒடுக்கும் நடவடிக்கையாக, பாஜக அரசு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை எனைஏவை தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் அரசியல் கட்சியாக பதிவு பெற்ற வெளிப்படையாக செயல்படும் இதுபோன்ற இஸ்லாமிய அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை பாஜக சங்பரிவார் கும்பல் நிறுத்திக்கொள்ள வேண்டுமென வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகளை குறிவைத்து கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் அந்த மாவட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி.. இந்த நிபந்தனைகளில் ஒன்றை மீறினாலும் போலீஸ் ஆக்சன் எடுக்கலாம்

வன்முறையோ கலவரங்களோ ஏற்படும் பட்சத்தில் அதை உடனடியாக தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படையின் ஒரு பிரிவான அதிவிரைவு அதிரடிப்படையினர் இரண்டு பெட்டாலியன் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கோவை,  பொள்ளாச்சி,  மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் பாஜகவிற்கு சொந்தமான பகுதிகளில் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசப்பட்டது.

இஸ்லாமியர்கள் மீது பழி போடுவதற்காக இதை வழக்கம்போல பாஜகவினரே செய்திருக்க்கூடும் என்ற விமர்சனங்களும் இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை மையமாக வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சிலரை போலீசார் வீடு புகுந்து வன்முறையாக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..