விமான நிலையத்தில் உள்ளாடையை அவிழ்த்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.. கத்தை கத்தையாக பணம்.. கைது 3.

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2022, 10:04 AM IST
Highlights

சென்னையிலிருந்து சிங்கப்பூா்,தாய்லாந்து நாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை, சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னையிலிருந்து சிங்கப்பூா்,தாய்லாந்து நாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை, சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர் செல்லும்  இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதையும் படியுங்கள்: மின்வாரிய ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

அவர்கள் உடைமைகளை சோதித்தனார். உடைமைகளில் எதுவும் இல்லை, இதை அடுத்து அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை கலைந்து சோதித்தனா். அவர்கள் இருவரின் உள்ளாடைகளுக்குள் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் வெளிநாட்டு பணம் 20, 400 மறைத்து வைத்து இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா். 

இதையும் படியுங்கள்: விமானத்தில் அதிவேக இன்டர்நெட்டா ? எலோன் மஸ்கின் அடுத்த முயற்சி

இந்நிலையில்  சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காங் செல்லும் ஏர் ஏசியா விமான  பயணிகளையும், சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணியின்  உள்ளாடைகள் 15,000 சவுதி அரேபியன் ரியால் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.

சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து இரு  விமானங்களில் நடந்த சோதனைகளில்  மொத்தம் ரூபாய் 20 லட்சம் மதிப்புடைய, அமெரிக்க டாலர், சவுதி அரேபியா ரியால் வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் பயணிகள் 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
 

click me!