சிறுமிக்கு மது கொடுத்து சீரழித்த அரசியல்வாதி மகன்..பிறந்தநாள் பார்ட்டியில் நேர்ந்த விபரீத சம்பவம் !

Published : Apr 11, 2022, 04:41 PM IST
சிறுமிக்கு மது கொடுத்து சீரழித்த அரசியல்வாதி மகன்..பிறந்தநாள் பார்ட்டியில் நேர்ந்த விபரீத சம்பவம் !

சுருக்கம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் தனது பிறந்த நாள் விழவை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவிற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் சென்றுள்ளார். அப்போது பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பியபோது பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உள்ளூர் சுடுகாட்டில் அவசரமாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பெண் தனியாக விருந்துக்கு சென்றாரா அல்லது சக நண்பர்கள் உடன் சென்றாரா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் விருந்தில் மது அருந்தும்படி வற்புறுத்தப்பட்டதாகவும், ஒரு பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சோஹல் தன்னை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சோஹலை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், அவரது தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான சமர் தனது குடும்பத்தினருடன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : எடப்பாடி கோட்டைக்குள் ‘கெத்து’ காட்டிய சசிகலா.. தீர்ப்புக்கு முன்பும், பின்பும் நடந்த ட்விஸ்ட் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!