ரூ.5000 கொடுத்தால் போதும் இளம்பெண்களுடன் குஜாலாக இருக்கலாம்.. அழகிகளை வைத்து விபச்சாரம்.. சிக்கியது எப்படி?

By vinoth kumar  |  First Published Apr 11, 2022, 2:16 PM IST

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆன்லைன் மூலமாகவும் விடுதியில் வைத்தும் பாலியல் தொழில் நடைபெறுவதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர். 


சென்னையில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட 5 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

பாலியல் தொழில்

Tap to resize

Latest Videos

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆன்லைன் மூலமாகவும் விடுதியில் வைத்தும் பாலியல் தொழில் நடைபெறுவதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த நபரிடம் போலீசார் நைசாக பேசியபோது, விடுதியில் அழகிய பெண்கள் உள்ளனர். 5000 ரூபாய் கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

7 பேர் கைது

இதையடுத்து  போலீசாரை அழைத்துக்கொண்டு விடுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஐந்து பெண்களை காண்பித்தபோது  நாளைக்கு வருகிறோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில், விடுதிக்கு 20க்கும் மேற்பட்ட போலீசார் சென்று சோதனை நடத்தி அங்கிருந்து 5 அழகிகளை மீட்டனர். இதன்பின்னர் விடுதி மேனேஜர் உட்பட 7 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சிறையில் அடைப்பு

இதில், சிதம்பரம் மாவட்டம் வடக்கு வீதி தெருவை சேர்ந்த விடுதி மேனேஜர் சீனிவாசன்(60). சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பரத்குமார்(37), ராம்நாடு தெற்கு தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(30), நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அம்பரீஷ்(24), கோயம்பேடு சவுமியாநகரை சேர்ந்தவர் சுராஜ்(27), வில்லிவாக்கம் எம்.ஆர் நாயுடு நகரை சேர்ந்த திருப்பதி(28), சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளவரசன்(28) என்று தெரிந்தது. இதையடுத்து விடுதிக்கு சீல் வைத்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட ஐந்து அழகிகளை சென்னை மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேனேஜர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!