இன்ஸ்டாகிராமில் காதல் லீலை..10ம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து கதற வைத்த வாலிபர்

Published : Jul 12, 2022, 09:07 PM IST
இன்ஸ்டாகிராமில் காதல் லீலை..10ம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து கதற வைத்த வாலிபர்

சுருக்கம்

ஆவடியில் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ஆவடி, அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் (ஆன்லைன் ஆப்) வாயிலாக செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற  25 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாவில் ஆரம்பித்த இந்த நட்பு நாளடைவில் மாணவியிடம் சகோதரன் எனக்கூறி பழகியுள்ளார். இதன் பின்னர் ஆபாசமாக படமெடுத்து அனுப்புமாறு மாணவியை வற்புறுத்தியுள்ளார். மாணவி இதற்கு சம்மதிக்காததால் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அழிக்க 25 ஆயிரம் ரூபாய் கேட்டும் மிரட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

இதுகுறித்து மாணவியின் தந்தை கடந்த வாரம் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி, வழக்கு பதிந்த போலீசார், செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் பகுதியில் தலைமறைவாக இருந்த விக்கியை கைது செய்து விசாரித்தனர். அதில் பிளானட் ஆப் ரோமியோ என்ற ஆப் வாயிலாக ஓரினச் சேர்க்கையாளர்களை மிரட்டி பணம் மற்றும் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.

சாத்தான்காடு காவல் நிலையத்தில் விக்கி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆவடி மகளிர் போலீசார் விக்கியை போக்சோவில் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!