தாயின் மார்பில் 12 முறை கோடூரமாக கத்தியால் குத்திய மகன்.. ஐ லவ் யூ அப்பா என கடிதம் எழுதிவிட்டு செய்த காரியம்.

Published : Jul 12, 2022, 07:42 PM ISTUpdated : Jul 12, 2022, 07:46 PM IST
தாயின் மார்பில் 12 முறை கோடூரமாக கத்தியால் குத்திய மகன்.. ஐ லவ் யூ அப்பா என கடிதம் எழுதிவிட்டு செய்த காரியம்.

சுருக்கம்

கடுமையான மன அழுத்த நோய்க்கு ஆளான மகன் தனது தாயை 12 முறை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பின்னர் தனது தந்தைக்கு ஐ லவ் யூ அப்பா அம்மாவை கொன்று விட்டேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

கடுமையான மன அழுத்த நோய்க்கு ஆளான மகன் தனது தாயை 12 முறை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பின்னர் தனது தந்தைக்கு ஐ லவ் யூ அப்பா அம்மாவை கொன்று விட்டேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் ஒருவரை கொலை தற்கொலை வரை கொண்டு சென்று விடும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம் என்றும் அல்லது உரிய மருத்துவர்களை சந்தித்து கவுன்சிலிங் பெற்று பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் எச்சரித்து வருகின்றனர். ஆனால் நம்மில் பலர் அதை பொருட்படுத்துவதே இல்லை. இதன் காரசமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி பலர் கொலை, தற்கொலை போன்ற கொடூரங்களுக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம்  மும்பையில் அரங்கேறியுள்ளது.

இதையும் படியுங்கள்:  10 ஆண்களுடன் உறவு கொள்வேன்.. உன்னால் என்ன செய்ய முடியும்.. வெறி ஏற்றிய மனைவி.. கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.

தனிமையில் இருந்து மன உளைச்சலுக்கு ஆளான மகன் தனது தாயை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம்  மும்பை  முலுண்டில் நடந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த மகேஷ் பாஞ்ச்சல் தனது குடும்பத்தாருடன் தொழில் காரணமாக மும்பையில் குடியேறினார், முகேஷ் துணி ,கம்பளி வியாபாரம் செய்து வருகிறார், இந்நிலையில்  மகேஷின் மகன் ஜெயேஸ் பஞ்சால் (22)  நீண்டகாலமாக மன அழுத்தப் பிரச்சினைக்கு ஆட்பட்டு வந்துள்ளார். அவர் தனக்கு உள்ள பிரச்சினையை நண்பர்கள் எவரிடமும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை, ஒரு கட்டத்தில் அவருக்கு மன அழுத்தம் அதிகரித்தது.

இதையும் படியுங்கள்: தோஷம் இருக்கா உங்களுக்கு ? பக்தர்களிடம் நகையை அபேஸ் செய்த கில்லாடி பூசாரி

தூங்கி எழுந்தவுடன் வித்தியாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார், அவர் தங்கள் குடும்பத்திற்கு ஒரே மகன் என்பதால் அவரது தாய் சாயா பஞ்சால் அவரை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் தந்தை ஊரில் இல்லாத போது தனது தாயிடம் பணம் மற்றும் சொத்தில் தனக்கு பங்கு தர வேண்டும் என கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால்  அதிர்ச்சியடைந்த அவரது தாய் தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் கோவத்தின் உச்சிக்கே சென்ற ஜெயேஸ் பன்சால் தனது தாயை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். சனிக்கிழமை இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஜெயேஸ் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் அவரது கழுதை அறுத்து கொடூரமாக கொன்றார்.

தனது தாயின் மார்பில் 12 முறை கத்தியால் அவர் குத்தியதாக தெரிகிறது. கொலை நடந்த சிறிது நேரத்தில் தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த மகன் ஜெயேஸ் தனது தந்தைக்கு உருக்கமாக கடிதம் எழுதினார், ஐ லவ் யூ டாடி அம்மாவின் சாவுக்கு நான் தான் காரணம், நான்தான் என் அம்மாவை கொன்று விட்டேன், என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என குஜராத்தி மொழியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு முலாந்த் ரயில் நிலையம் சென்று அங்கு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். 

ஆனால் அதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வழக்கில் சந்தேக நபராக கருதப்படும் ஜெயேஸ் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் வரை இந்த வழக்கு விசாரணை தொடரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!