10 ஆண்களுடன் உறவு கொள்வேன்.. உன்னால் என்ன செய்ய முடியும்.. வெறி ஏற்றிய மனைவி.. கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.

Published : Jul 12, 2022, 06:48 PM ISTUpdated : Jul 12, 2022, 07:01 PM IST
10 ஆண்களுடன் உறவு கொள்வேன்.. உன்னால் என்ன செய்ய முடியும்.. வெறி ஏற்றிய மனைவி.. கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.

சுருக்கம்

விவாகரத்து செய்ய முயன்ற கணவனிடம் நான் உன் கண்ணெதிரிலேயே 10 ஆண்களுடன் உடலுறவு கொள்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் என மனைவி சவால் விடுத்த நிலையில் கணவர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

விவாகரத்து செய்ய முயன்ற கணவனிடம் நான் உன் கண்ணெதிரிலேயே 10 ஆண்களுடன் உடலுறவு கொள்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் என மனைவி சவால் விடுத்த நிலையில் கணவர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் சத்தீஷ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் செமரியா செளகி கந்த்சாராவை சேர்ந்த  தம்பதியருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். அந்நிலையில் தம்பதியர் இருவரும் வேலை நிமித்தமாக லக்னோ சென்றிருந்தனர். அங்கு அவரின் மனைவிக்கும் வேறு ஒரு ஆணுக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டது. வீட்டில் கணவன் இல்லாத போது அந்தப் பெண் அந்த ஆணுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார் அதை கணவன் நேருக்கு நேர் பார்த்து விட்டார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்தது. இந்நிலையில் ஜூலை 5ஆம் தேதி இருவரும் லக்னோவில் இருந்து ரயில் மூலம் துர்க் வந்தனர் ஜூலை 6 ஆம் தேதி பெமே தாரா  வந்து சேர்ந்தனர். அன்றிலிருந்து கணவர் அந்த பெண்ணை விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஜூலை 6ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவரது மனைவி நீ என்னிடம் இருந்து விவாகரத்து பெறப் போகிறாய், இப்போதே இந்த வீட்டுக்கு அருகில் உள்ள 10 ஆண்களை இங்கு வரவழைத்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபடுப்போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும் என அவரது மனைவி சவால் விடுத்தார்.

இதையும் படியுங்கள்: திருநங்கையுடன் பாலியல் இச்சைக்கு சென்ற கடைக்காரர்..கடைசியில் நடந்த விபரீத சம்பவம்

இதனால் ஆத்திரமடைந்த கணவன் அவரது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அதை தற்கொலையாக மாற்ற முயற்சித்து அவர், மனைவியை உடலை அவரது அறைக்கு தூக்கி சென்று கழுத்தில் கயிற்றை மாட்டி மின்விசிறியில் பிணத்தை தொங்கவிட்டார். இதனையடுத்து தன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள்: கடனை கட்டு, இல்ல போட்டோவ நிர்வாணமா போட்டு நாரடிச்சிடுவோம்.. டார்ச்சர் தாங்கமுடியாமல் பெண் தற்கொலை.

அதில் அது தற்கொலை அல்ல மனைவி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது போலீசார் அவரிடம் கடுமையாக விசாரித்தனர் அப்போது மனைவியை தான் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் மனைவியை கொன்றதில் தான் வருத்தப்படவில்லை என்றும் இறக்கம் இல்லாதவர்களுக்கு இப்படித்தான் பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார், மேலும், தான் செய்த செயலுக்கு வருந்தவில்லை என்றும் அவர் போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!