காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறிய மகள்.. கோபத்தில் தாய் செய்த விபரீத சம்பவம் !

Published : Apr 25, 2022, 04:35 PM IST
காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறிய மகள்.. கோபத்தில் தாய் செய்த விபரீத சம்பவம் !

சுருக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், மாணவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரது மனைவி ஜெயலெட்சுமி. இந்த தம்பதிக்கு சந்தியா (28) என்ற மகள் இருந்தார். இவர் சென்னையில் தங்கி பி.எஸ்சி நர்சிங் படித்துவந்தபோது இவருக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு சந்தியாவின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் அவர் காதலித்து வந்துள்ளார். இதனால் சந்தியாவின் பெற்றோர் அவருக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஆனால் அவரது பெற்றோர் காதலனுடன் சேர்த்து வைக்க முடியாது என கூறியுள்ளனர். இதையடுத்து சந்தியா வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். அப்போது அவரை பெற்றோர்கள் தடுத்துள்ளனர். இதில் தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி வீட்டிலிருந்த கட்டையை எடுத்து மகள் தலையில் ஓங்கி அடுத்துள்ளார்.

இதில் சந்தியா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பிறகு ரத்த வெள்ளத்திலிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சந்தியாவின் தாய் ஜெயலெட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : PUBG Madan : பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து.! சென்னை ஐகோர்ட் உத்தரவு !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி