ஷாக்கிங் நியூஸ்.. 11 வயது சிறுமியை சீரழித்த 6 பேர்.. எல்லோருக்கும் என்ன வயசு தெரியுமா? பகீர் தகவல்.!

Published : Apr 25, 2022, 01:11 PM ISTUpdated : Apr 25, 2022, 01:14 PM IST
ஷாக்கிங் நியூஸ்.. 11 வயது சிறுமியை சீரழித்த 6 பேர்.. எல்லோருக்கும் என்ன வயசு தெரியுமா? பகீர் தகவல்.!

சுருக்கம்

2 தோழிகளுடன் நள்ளிரவில் தனது வீட்டுக்கு சிறுமி திரும்பி கொண்டிருந்துள்ளார். அவர்களை சிறுவர்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.  இதன்பின்னர், ஆளில்லாத பகுதிக்கு அந்த சிறுமியை கடத்தி சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

நடன நிகழ்ச்சி பார்க்க சென்ற 11 வயது சிறுமியை 6 பேர் கொண்ட சிறார்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஜார்கண்டில் அதிர்ச்சி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் குந்தியில் வசித்து வரும் 11 வயது சிறுமி பக்கத்திலுள்ள கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அந்த திருமணத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் தனது தோழிகளுடன் சென்றார். அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த சில சிறுவர்கள், சிறுமியிடம் கேலி, கிண்டல் செய்துள்ளனர்.  இதில், சிறுமிக்கும், சில சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

கூட்டு பாலியல் பலாத்காரம்

இதன்பின்னர், 2 தோழிகளுடன் நள்ளிரவில் தனது வீட்டுக்கு சிறுமி திரும்பி கொண்டிருந்துள்ளார். அவர்களை சிறுவர்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.  இதன்பின்னர், ஆளில்லாத பகுதிக்கு அந்த சிறுமியை கடத்தி சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தோழிகள் இருவரும் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்று சிறுமியின் பெற்றோரிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளனர்.  அவர்கள் பதறியடித்து கொண்டு, சிறுமியை தேடி சென்றுள்ளனர்.  அவர்களை கண்டதும் சிறுவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

சிறுவர்கள் கைது

இதுதொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்.  அவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்.  அதனால், அவர்கள் சிறுவர் சீர்த்திருத்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மேலும், சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க;- வாயில் துணியை வைத்து 11ம் வகுப்பு மாணவி கதற கதற பலாத்காரம்.. புருஷனுக்காக அத்தை செய்த வேலையை பார்த்தீங்களா?

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!