ஜெ.சி.பி. கொண்டு ஏ.டி.எம்.-ஐ தூக்கிச் சென்ற திருடர்கள்... வைரலாகும் பரபர வீடியோ...!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 25, 2022, 12:54 PM IST
ஜெ.சி.பி. கொண்டு ஏ.டி.எம்.-ஐ தூக்கிச் சென்ற திருடர்கள்... வைரலாகும் பரபர வீடியோ...!

சுருக்கம்

திருட்டு சம்பவம் முழுவதும், ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் வீடிவோ வடிவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.  

திருட்டு என்று வந்து விட்டால் கயவர்கள் எந்த எல்லைக்கும் போக ஒரு போதும் தயங்க மாட்டார்கள் என்றே கூறலாம். இது போன்ற சம்பவம் தான் தற்போது மகாராஷ்டிரா மாநலத்தில் அரங்கேறி இருக்கிறது. மராட்டிய மாநிலத்தின் சங்லி பகுதியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை கயவர்கள்  ஜெ.சி.பி. மூலம் பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் அடங்கிய சி.சி.டி.வி. வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்று இருக்கிறது. திருட்டு சம்பவம் முழுவதும், ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் வீடிவோ வடிவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. 

 

ஜெ.சி.பி. சம்பவம்:

வைரல் வீடியோவின் படி, மர்ம நபர் முதலில் ஏ.டி.எம். மையத்தில் யாரேனும் இருக்கின்றார்களா என்பதை நோட்டம் விடுகிறார். யாரும் இல்லாததை உறுதிப்படுத்திய மர்ம நபர் அங்கு இருந்து வெளியேறி விடுகிறார். மர்ம நபர் வெளியேறிய சில நிமிடங்களில், ஏ.டி.எம். மைய கதவுகளை இடித்துத் தள்ளிக் கொண்டு ஜெ.சி.பி. கிரேன் உள்ளே வருகிறது. பின் மெல்ல ஏ.டி.எம். இயந்திரத்தை பிளக்கிறது.

ஒரு கட்டத்தில் ஏ.டி.எம். இயந்திரம் பலத்த சேதங்களை எதிர்கொண்டு தரையில் இருந்து பிடுங்கப்பட்டு விட்டது. இயந்திரம் தரையில் இருந்து பிடுங்கும் முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து, ஜெ.சி.பி.  ஏ.டி.எம். இயந்திரத்தை அசால்ட்டாக வெளியே இழுத்துக் கொள்வதோடு வீடியோ நிறைவு பெறுகிறது. 

உ.பி.யில் திருட்டு:

முன்னதாக மற்றொரு வீடியோவில் உத்திர பிரதேச மாநிலத்தின் சந்தௌலி மாவட்டத்தில் ஹார்டுவேர் கடையில் திருடிய நபர், நடனம் ஆடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இந்த சம்வம் காவல் துறை எஸ்.ஐ. வசிக்கும் வீட்டின் அருகிலேயே நடைபெற்று இருக்கிறது. கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை அடுத்து, உரிமையாளர் கடையினுள் சென்றார். அப்போது கடையில் திருட்டு சம்பவம் நடைபெற்றதை கடை உரிமையாளர் அறிந்து கொள்கிறார். அதன் பின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது தான் இந்த வீடியோ கிடைத்தது.

இதுதவிர பீகார் மாநிலத்தின் ரோட்டாஸல் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் போன்று நடித்து பயன்படுத்தப்படாமல் இருந்த இரும்பு பாலத்தை கயவர்கள் கழ்றி சென்ற சம்பவம் அரங்கேறியது.  500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தை கயவர்கள் திருடி சென்ற சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!