கள்ளக்காதலன் உட்பட 3 பேருக்கு பெற்ற மகளை விருந்தாக்கிய கொடூர தாய்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்..!

By vinoth kumar  |  First Published Jun 8, 2022, 8:51 AM IST

அப்பகுதியில் வசிக்கும் சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சந்தோஷ் வந்து சென்றுள்ளான். இருவருக்கும் உள்ள தொடர்பு மகளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக தாயிடம் கேட்டபோது மகளை மிரட்டியுள்ளார். 


உத்தரபிரதேசத்தில் தனது கள்ளக்காதலன் உட்பட 3 பேருக்கு தனது மகளை விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் ஹர்ராயா பகுதியில் வசிக்கும் பெண்ணின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால், அந்த பெண் தனது 16 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சந்தோஷ் வந்து சென்றுள்ளான். இருவருக்கும் உள்ள தொடர்பு மகளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக தாயிடம் கேட்டபோது மகளை மிரட்டியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கடந்த மே 20ம் தேதி  இரவு 7 மணியளவில் வழக்கம்போல் சந்தோஷ்  மற்றும் அவரது நண்பர் ஆகாஷ், கந்தைலால் ஆகியோரை அழைத்துக்கொண்டு வந்தார். 3 பேருக்கும் அந்த பெண் தேனீர் போட்டுக்கொடுத்தார். 3 பேரும் தேனீர் அருந்திக் கொண்டிருந்த சமயத்தில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால், சிறுமி மட்டும் வீட்டிற்குள் இருந்ததார். அப்போது, தேனீர் குடித்துக்கொண்டிருந்த ஒருவன் வீட்டின் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டான். இதனால், செய்வதறியாமல் அதிர்ச்சியடைந்த மகள் அவர்களிடம் தப்பிக்க முயன்றார். ஆனால், அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக மடக்கி 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். 

பின்னர், அங்கிருந்து  3 பேரும் கிளம்பினர். தனது தாயே பாலியல் பலாத்காரத்துக்கு உடந்தையாக இருந்தது குறித்து தனது உறவினரிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த  அவர் மே 28ம் தேதி காவலர் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சிறுமியின் தாய், பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குற்றம்சாட்டவர்கள் தலைமறைவாக உள்ளதால் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;- உடலுறவினால் ஏற்பட்ட சம்பவம்.. எங்களுக்கு குழந்தை பிறக்காது - கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

click me!