விசாரணை என்ற பெயரில் ஆணுறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை.. உ.பி போலீஸ் வெறியாட்டம்.

By Ezhilarasan Babu  |  First Published Jun 7, 2022, 6:43 PM IST

பசுவை கடத்த உதவினார் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் கடுமையாக தாக்கி ஆணுறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


பசுவை கடத்த உதவினார் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் கடுமையாக தாக்கி ஆணுறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சித்திரவதையில் ஈடுபட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக நாடு முழுவதும்  Lockup Death சிறை மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விசாரணை என்ற பெயரில் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கிய அதன்மூலம் பலர் பல அப்பாவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் போலீசார் தங்களின் அத்துமீறல்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றங்களில் இருந்து தப்பித்தும் விடுகின்றனர். ஆனாலும் சில நேரங்களில் உண்மை வெளிச்சத்துக்கு வந்து குற்றம் செய்தவர் தண்டனை பெறும் நிலையும் இருந்து வருகிறது. இந்த வரிசையில் உத்திரபிரதேச மாநிலத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு இளைஞரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

Latest Videos

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக மாடுகளை திருடியதான குற்றச்சாட்டில் அடுக்கடுக்காக பலர் கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மாடு  திருடியதாக குற்றச்சாட்டில்  ரெஹான்  என்ற நபரை படாவுன்  போலீசார் கைது செய்தனர். அப்போது அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து லாக்கப்பில் தள்ளி காவல்துறை ஆய்வாளர் மற்றும் போலீசார் கடுமையாக அடித்து சித்ரவதை செய்தனர். பல மணிநேரம் அந்த இளைஞரை தடியால் அடித்து அந்த இளைஞரின் ஆணுறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்தும் சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞரை பார்க்க அவரது உறவினர்கள் வந்தபோதே இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. அத்துடன் ரெஹானேவை  விடுவிக்க போலீசார் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர்.

அதன்பிறகே அவரை போலீசார் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசார் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பாதிக்கப்படவரின் ஆணுறுப்பில் காயம் ஏற்பட்டிருந்தது, நடந்த கொடுமை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதில் தீவிரம் காட்டும் அதிகாரிகள் காவல் நிலைய பொறுப்பாளர் மற்றும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், பாதிக்கப்பட்ட நபர் பசு கடத்தல் கும்பலுக்கு உதவியதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து  வழக்கு பதிவு செய்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

click me!