மட்டையாகும் அளவிற்கு சரக்கை ஊத்தி கொடுத்த மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்..!

Published : Jun 07, 2022, 03:01 PM ISTUpdated : Jun 07, 2022, 03:02 PM IST
மட்டையாகும் அளவிற்கு சரக்கை ஊத்தி கொடுத்த மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்..!

சுருக்கம்

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மனைவி சுலோச்சனாவிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஆசை ஆசையாக பேசி மதுவை குடிக்க வைத்து கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பைரப்ப கோட்டால கிராமத்தை சேர்ந்தவர் பங்காருசாமி (35). இவரது மனைவி சுலோச்சனா (30). இந்நிலையில், சுலோச்சனாவுக்கும் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மனைவி சுலோச்சனாவிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சுலோச்சனா தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதை தனது கள்ளக்காதலன் விஜய்யிடம் தெரிவித்துள்ளார். அதன்படி இருவரும் இணைந்து பங்காருசாமியை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். தாங்கள் திட்ட மிட்டபடி கடந்த 30ம் தேதி இரவு சுலோச்சனா தனது கணவரிடம் ஆசை, ஆசையாக பேசி மது குடிக்க வைத்துள்ளார். 

இதையும் படிங்க;-  எவ்வளவோ சொல்லியும் அடங்காத மனைவி.. கள்ளக் காதலனுடன் சேர்த்து தீர்த்துக் கட்டிய கணவன்.

பின்னர் வெளியே செல்லலாம் எனக்கூறி அழைத்து சென்றுள்ளார். கிராம எல்லை பகுதியில் உள்ள மலை மீது அழைத்து சென்றபோது மேலும் மது குடிக்க வைத்துள்ளார். அப்போது அங்கு விஜய்யும் வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் பங்காருசாமி மயங்கி விழுந்துள்ளார். அப்போது, அவரது தலை மீது பாறாங்கல்லை போட்டுள்ளனர். இதில், தலை நசுங்கிய நிலையில் பங்காருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மறுநாள் காலை தனது கணவரை காணவில்லை என அக்கம்பக்கத்தினரிடம் கூறிய சுலோச்சனா காவல் நிலையதத்தில்  புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வனப்பகுதியில் பங்காருசாமி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பங்காருசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரித்து வந்தனர். அப்போது, மனைவி சுலோச்சனா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, சுலோச்சனாவும் அவரது கள்ளக்காதலன் விஜய்யும் சேர்ந்து கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;- என்ன விட்டுடுங்க.. ஒன்னும் பண்ணிராதீங்க.. அலறிய மாணவியை கதறவிட்ட 4 பள்ளி மாணவர்கள்.. சென்னையில் பயங்கரம்.!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!