
ஒன்பதாம் வகுப்பு மாணவியை விடுதியில் வைத்து பள்ளி தாளாளர் பல முறை கற்பழித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் அந்த மாணவி கர்ப்பமாகி உள்ளாதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
6 வயது குழந்தை முதல் 60 வயது கிழவிகள் வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க எத்தனைதான் நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இதேபோல் காதலிப்பதாக கூறி கற்பழிப்பு செய்தல், காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து மோசடி செய்வது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது போன்ற எண்ணற்ற கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர். இதே நேரத்தில் பள்ளி பயிலும் மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் கொடூரங்களும் பரவலாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த ஆம் வகுப்பு மாணவி பள்ளி தாளாளரால் வன்புணர்வு செய்யப்பட்டு கர்ப்பமாகியுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள கொண்டையா பாலத்தில் helping-hands என்ற பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியின் விடுதியில் தங்கி 40க்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி தாளாளர் விஜயகுமார் (60) என்பவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை விடுதி அறையில் வைத்தே அவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக பலமுறை அந்த மாணவியை விஜயகுமார் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் கோதாரி குண்டாவில் உள்ள தனது வீட்டிற்கு அந்த சிறுமி சென்றுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சிறுமி தனது தாயிடம் நடந்த விஷயத்தை கூறினார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை அடுத்து திஷா காவல் நிலைய டிஎஸ்பி சுந்தர முரளி மோகன் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பெயரில் பள்ளி தாளாளர் விஜயகுமாரை கைதுசெய்து விசாரித்ததில் அவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது நிரூபணம் ஆனது, இதனையடுத்து அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் காக்கிநாடாவில் உள்ள கொண்டையா பாலத்தில் இயங்கி வரும் helping-hands பள்ளி தாளாளர் விஜயகுமாரின் அட்டூழியங்களை ஊடகவியலாளரிடம் காவல் டிஎஸ்பி பகிர்ந்துகொண்டார். குழந்தைகளை பாதுகாத்து, கல்வி போதிக்க வேண்டிய பள்ளி தாளாளரே பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் காக்கிநாடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.