அதிகளவில் கல்லூரி மாணவிகள் ஹாஸ்டலுக்கு வரத் துவங்கினார்கள். இவரும், அந்த பகுதியில், கல்லூரி மாணவிகளுக்கு தனது விடுதியை குறைந்த வாடகைக்கு விட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜ் நகரில் கர்னல் கஞ்ச் பகுதியில் இருக்கிறது அந்த மகளிர் விடுதி. பல வருடங்களாக அந்த லேடீஸ் ஹாஸ்டலை ஆஷிஷ் கரே என்பவர் நடத்தி வருகிறார். அந்த பகுதியில் பிரபலமான,கைராசிக்கார மருத்துவர் எனப் பெயரெடுத்த மருத்துவரின் மகன் தான் இந்த ஆஷிஷ் கரே. அந்நகரின் பிரபல மருத்துவரின் மகன் நடத்தும் மகளிர் விடுதி என்பதினால், அதிகளவில் கல்லூரி மாணவிகள் ஹாஸ்டலுக்கு வரத் துவங்கினார்கள். இவரும், அந்த பகுதியில், கல்லூரி மாணவிகளுக்கு தனது விடுதியை குறைந்த வாடகைக்கு விட்டுள்ளார்.
அழகான பெண்கள் என்றால், இன்னும் கட்டண சலுகைகள் உண்டு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான அறை கட்டணங்களை வசூலித்துள்ளார். ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவிகளும், வேறு வேறு ஹாஸ்டலில் இருந்த தங்களது தோழிகளை, இவர் நல்லவர், கஷ்டப்படுகிறவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அறை தருகிறார் என இந்த ஹாஸ்டலைப் பரிந்துரைத்துள்ளனர். இதனால், இந்த விடுதியில் எப்போதும் மாணவிகளும், இளம்பெண்களுமாக கூட்டம் இருந்து கொண்டே வந்தது. இந்நிலையில், குளியலறைக்கு இளம்பெண் ஒருவர் குளிக்க சென்ற போது, ஷவரில் இருந்து தண்ணீர் சரியாக வரவில்லை.
இது குறித்து நான்கைந்து நாட்களாக புகார் தெரிவித்தும், சரி செய்யப்படவில்லை. அதன் பின்னர், ஒவ்வொரு முறையும், ஷவர் வெவ்வெறு திசையில் திருப்பப்பட்டிருப்பதைப் பார்த்து, குளிக்கும் போது, இவராகவே ஷவரின் மேல் மூடியை கழற்றி சரி செய்ய முயற்சித்துள்ளார். அதில் கேமரா ஒன்றும், அதனுடன் இணைக்கப்பட்ட ஒயரும் இருந்துள்ளது. அதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விடுதிக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்துள்ளனர். பிறகு கரே கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து கேமரா, வீடியோக்கள் சேமிக்கப்பட்ட பல ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. குளியலறையில் பதித்த கேமராக்களின் வழியாக வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றை கணினி லேப்பில் இருந்தபடி கரே பார்த்து ரசித்து வந்துள்ளார். அந்த வீடியோக்களை ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்துள்ளார். அப்பாவி மாணவிகள் என்றால், உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், உன்னை மட்டும் இப்படி வீடியோவாக பதிவு செய்திருக்கிறேன்.
படுக்கைக்கு வர மறுத்தால், இந்த வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன் என தனித்தனியே பல இளம் பெண்களையும், கல்லூரி மாணவிகளையும் மிரட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அந்த வீடியோக்களை தான் பார்த்து ரசித்ததுடன், பலருக்கும் விற்பனை செய்திருப்பதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :AIADMK : அமமுக முக்கிய புள்ளிகள் அதிமுகவுக்கு தாவினர்..டிடிவி தினகரன் அதிர்ச்சி !
இதையும் படிங்க :ஸ்டாலின் ஆட்சி நம்பர் 1.. அப்போ கலைஞர் ஆட்சி நல்லா இல்லையா ? உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை