
திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவன் கட்டிப்போட்டு கத்தியார் குத்தி கொலை செய்துள்ளார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் இச் சம்பவம் நடந்துள்ளது.
சமீபகாலமாக கள்ளக் காதலால் அதனால் ஏற்படும் கொலை தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவற்றை தடுக்க பெரிய அளவில் சட்டதிட்டங்கள் இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது. சமூகத்தில் இது தனி மனித ஒழுக்கம் சார்ந்த விஷயம் என்பதால் காவல்துறையோ அரசோ இதில் பெரிய அளவில் செயல்பட முடியாத நிலை உள்ளது. இந்த வரிசையில் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவன் கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் தச்சேப் பள்ளி நகர பஞ்சாயத்தில் வசிப்பவர் ரமேஷ், இவரது மனைவி சல்லா நாகமணி (28) இவர்களுக்கு அகில் சாய், லோகேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆரம்பத்தில் தம்பதியர் மகிழ்ச்சியாகவே இருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையே தகராறு அதிகரித்தது. சில மாதத்திற்கு முன் நாகமணிக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது, பின்னர் அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது, இருவரும் வீட்டில் கணவன் இல்லாத நேரங்களில் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். மனைவியின் நடவடிக்கையில் திடீர் மாற்றங்கள் தென்பட்டதால் சந்தேகம் அடைந்த கணவன் மனைவியை கவனிக்க ஆரம்பித்தார், பின்னர் மனைவி இளைஞர் ஒருவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டு வருதை கண்டு பிடித்தார். இதனால் மனைவி நாகமணியிடம் அவர் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதுதொடர்பாக குடும்ப பெரியவர்களிடம் பஞ்சாயத்து நடத்தப்பட்டு மனைவி நாகமணிக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர், பின்னர் புதன்கிழமை இரவு தம்பதியரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது, அப்போது மனைவியை தீர்த்துக்கட்ட கணவன் ரமேஷ் முடிவு செய்தார், இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் மனைவி நாகமணியை கட்டிப் போட்டார், வீட்டில் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார், இதில் நாகமணி ரத்த வெள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் ரமேஷ் தப்பி தலைமறைவானார், நாகமணியில் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.