16 வயது சிறுமி கர்ப்பம்.. எஸ்கேப் ஆன காதல் ஜோடிகள்.! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Published : Jul 13, 2022, 05:04 PM IST
16 வயது சிறுமி கர்ப்பம்.. எஸ்கேப் ஆன காதல் ஜோடிகள்.! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவரது பெற்றோர் இறந்த நிலையில், தனது பெரியம்மா அரவணைப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் பகுதியில் உள்ள தனியார் அட்டை தயாரிக்கும் கம்பெனியில் சிறுமி வேலைக்கு சேர்ந்தார். 

அப்போது, இவரது கம்பெனி அருகில் உள்ள கம்பெனியில் வேலை செய்த சதீஸ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமி வேலையை விட்டு வீடு திரும்பினார். அப்போது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் பயந்து போன சிறுமி நன்னிமங்கலம் கிராம சுகாதார செவிலியர் சிஸிலினாவிடம் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

கடந்த ஜூன் 24 ம் தேதி சிஸிலினா மற்றும் நன்னிமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மனைவி ஜோதி ஆகியோர் சிறுமியை அழைத்துக் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற இவர்கள் சிறுமியின் வயதை 18 வயது என தெரிவித்து, சிறுமியின் அட்டெண்டராக ஜோதியை காண்பித்து, சிறுமிக்கு பெண் மருத்துவர் ஒருவர் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த லால்குடி மகளிர் போலீசார் திருச்சி மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.

மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!

அப்போது சிறுமி ஜோதி ஆகியோர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார்.  புகாரின் பேரில் லால்குடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மற்றும் சிறுமியின் சட்டவிரோத கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த கிராம சுகாதார செவிலியர் சிஸிலினா, உறவினர் ஜோதி ஆகியோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..கைலாசா ஆண்டவர் மீண்டும் வருகிறார்.. நித்யானந்தா ரிட்டர்ன்ஸ்.! பக்தர்களே ரெடியா.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை