மனைவி குளிப்பதை வளைத்து வளைத்து வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்ட கணவன்.. காரணத்தை கேட்டா கொதிப்பீங்க.

Published : Sep 03, 2022, 10:31 AM IST
மனைவி குளிப்பதை வளைத்து வளைத்து வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்ட கணவன்.. காரணத்தை கேட்டா கொதிப்பீங்க.

சுருக்கம்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாலோயர்களை அதிகரிக்க, மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து கணவன் அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாலோயர்களை அதிகரிக்க, மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து கணவன் அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

சமூகத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையாவோருக்கு இணையாக  பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தங்களது வலைதளப் பக்கத்தை பலரும் பின் தொடர வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு விபரீதங்களில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் தனது இன்டாகிராம் பக்கத்திற்கு பாலோயர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கணவன் மனைவி குளிக்கும் வீடியோவை இன்ஸட்டாவில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  கட்டிய தாலியின் ஈரம் காய்தவற்குள்! மாப்பிள்ளையை தூக்கி எறிந்த மணப்பெண்! என்ன காரணம் தெரியுமா?

முழு விவரம் பின்வருமாறு:- உத்திரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் ஜாஸ்ரானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலியா தோயம்  என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பிருந்தே அந்த இளைஞர் செல்போனுக்கு அடிமையாக இருந்து வந்தார். அதே நேரத்தில் அவர் டெல்லியில் சர்க்கஸ் கம்பெனி ஒன்றிலும் பணியாற்றி வருகிறார், கண்ணில்படுபவைகள் எல்லாவற்றையும் வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவதை தனது முழு நேர பொழுது போக்காக வைத்திருந்தார். 

இதையும் படியுங்கள்: ஆசைவார்த்தை கூறி 13 வயது சிறுமியுடன் ஆசைத்தீர உல்லாசம்.. பீச்சில் சில்மிஷத்தின் ஈடுபட்ட போது இளைஞர் கைது.!

ஆனாலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு குறைந்த அளவிலேயே பாலோயர்கள் இருந்தனர். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார், தனது பாலோயர்களை அதிகப்படுத்த என்ன செய்யலாம் என யோசித்து நிலையில்தான் அவருக்கு அந்த விபரீத எண்ணம் தோன்றியது, மனைவி குளிக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டால் அதிக பாலோயர்கள் கிடைப்பார்கள் என அவர் முடிவு செய்தார். இந்நிலையில்தான் அவரது மனைவி குளிப்பதை அங்குல அங்குலமாக வீடியோ எடுத்த அவர், அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

பின்னர் இந்த தகவல் தெரிந்த அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனது கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பலமுறை அந்த வீடியோவை அகற்ற வலியுறுத்தியும் கணவர் நீக்காததால், கணவன் மீது புகார் கொடுக்கும் முடிவுக்கு அவரது மனைவி தள்ளப்பட்டார். இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!