உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்.. 10ம் வகுப்பு சிறுமியை சீரழித்த கொடூரன்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Published : Sep 02, 2022, 09:25 PM IST
உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்.. 10ம் வகுப்பு சிறுமியை சீரழித்த கொடூரன்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சுருக்கம்

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மே.குளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் குழந்தைகள் நல குழுவினர் சென்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அப்போதுதான் அந்த அதிர்ச்சிகர சம்பவம் வெளியே வந்தது. கண்ணன் அந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளியே வந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேலும் செய்திகளுக்கு..உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ..! சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க

இந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, குற்றவாளி கண்ணனுக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக ஏழு வருடம் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் அதை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட கால சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..அமெரிக்க ஜனாதிபதிக்கே சவால் விட்ட அதிமுக.. அந்த ஒரு வார்த்தை “எடப்பாடியார்” தான் காரணம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி