மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே உள்ள தையல் கடைக்கு சென்றுள்ளான். அப்போது, 60 வயது முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான தையல் கடையில் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொதுவெளியில் சுய இன்பத்தில் ஈடுபட்ட 60 வயது முதியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே உள்ள தையல் கடைக்கு சென்றுள்ளான். அப்போது, 60 வயது முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான தையல் கடையில் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். தனது அந்தரங்க உறுப்பை அந்த சிறுவனிடம் காட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன் வீட்டிற்கு சென்று தனது பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளான்.
இதையடுத்து சிறுவனின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக அந்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், மற்றவர் பார்வைக்கு படும்படியாக பொது வெளியில் சுய இன்பத்தில் ஈடுபடுவது பாலியல் குற்றம்.
பலர் வந்து செல்லும் பகுதியில் உள்ள தனது கடையில் இவ்வாறு நடந்து கொண்டது பாலியல் குற்றம். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அவன் எதிர்கொண்ட சம்பவம் மனதில் ஆழமான வடுவாய் பதிந்துவிடும். எனவே சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.