கனல் கண்ணனை டரியல் ஆக்கிய உயர்நீதி மன்றம்.. ஜாமின் மனு ரத்து.. ரவுண்டு கட்டும் போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2022, 7:10 PM IST
Highlights

பெரியார் சிலை குறித்து பேசிய விவகாரத்தில் கனல்கண்ணன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

பெரியார் சிலை குறித்து பேசிய விவகாரத்தில் கனல்கண்ணன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என சர்ச்சை பேச்சால் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் ஜாமின் கோரி இருந்தார். இந்நிலையில் அவருக்கு ஜாமின் வழங்க நீதி மன்றம் மறுத்துள்ளது. மேலும், அவருக்கு முன் ஜாமின் வழங்க காவல் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி சென்னை அடுத்துள்ள மதுரவாயில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழா நடைபெற்றது. அதில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் கடவுளை வணங்குபவன் முட்டாள் என எழுதப்பட்டுள்ள ஒரு சிலை உள்ளது, அந்த சிலை  உடைக்கப்பட வேண்டும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அந்நாள்தான்  இந்துக்களின் எழுச்சி நாள் என்ன பேசினார்,

இதையும் படியுங்கள்: நடத்துவது டாஸ்மாக்கு.. போதை இல்லா தமிழகம் உருவாக்க போறாராம்.. திமுக அரசை டாரா கிழிக்கும் அண்ணாமலை.

இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, கனல் கன்னட குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கனல் கண்ணன் மீது புகார் கொடுத்தனர், அதன் அடிப்படையில் இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கனல்கண்ணன்  பேசியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  எனவே எப்போது வேண்டுமானாலும் போலீசார் கைது  செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்வது நல்லதல்ல... உடனே இதை செய்யுங்கள்... துரைமுருகன் அறிவுறுத்தல்!!

இதனால் கைதுக்கு அஞ்சி கனல்கண்ணன் ஓடி தலைமறைவாகி விட்டார். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த வாறே அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார், அதில் கனல்கண்ணன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மாறாக பெரியார் குறித்து தான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பியிருந்தார்,  தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அப்படி பேசியதாகவும் தன் பேசியது எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த இடத்தில் கடவுளைக் கொச்சைப்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றிருக்கும் சிலை பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. அதனால்தான் அது உடைக்க வேண்டும் என பேசினேன், என தனது பேச்சை நியாயப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அவரது ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு  நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசார் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவரது பேச்சை கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளது எனசுட்டிக் காட்டினர். இந்நிலையில் நீதிமன்றம் கனல்கண்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கனல் கண்ணனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

click me!