
போதையில் மனைவியின் கன்னத்தைக் கடித்த கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக காவல் நிலையத்திற்கு பல்வேறு விதமான புகார்கள் வருவது வழக்கம், அந்த வழக்குகள் அனைத்தும் சீரியஸான வழக்குகள் என்று சொல்ல முடியாது, அதில் சில புகார்கள் முட்டாள்தனமானதாக கூட இருக்கலாம், ஆனால் பல வேடிக்கையான புகார்களும் அடிக்கடி வருகின்றன, கோழி காணாமல் போய்விட்டது, நாய் தொலைந்துவிட்டது, பெனசில் திருடி விட்டார்கள், அப்பா திட்டினார் போன்ற பல வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்து போலீசாரையே எரிச்சல் அடைய வைக்கிறன. இதில் பெரும்பாலான புகார்கள் குடும்ப வன்முறையை மையமாக வைத்தே வருகின்றன.
இதையும் படியுங்கள்: ஓயின் குடித்தால் அது வருமா.! மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள். பொது இடத்தில் அசிங்கம்.
கணவன் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்கின்றனர், காரணம் இல்லாமல் அடித்து துன்புறுத்துகின்றனர் போன்ற வழக்குகளும் வருவது உண்டு, சாதாரண விஷயங்களுக்கு கூட ஒரு சிலர் காவல் நிலையத்தில் அடிக்கடி புகார் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர், இந்த வகையில் கணவர் கன்னத்தை கடித்து விட்டார் என ஒரு விசித்திரமான ஒரு வழக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. கணவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார், இது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விவரம் பின்வருமாறு:-
இதையும் படியுங்கள்: செலவுக்கு பணம் வாங்கச் சென்ற இளம் நடிகை.. அறையில் பூட்டி வைத்து கதற கதற வன்புணர்வு.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கானூர் ஜேசிபி காலனியை சேர்ந்தவர் ஸ்ரவந்தி, இவருக்கும் ராம்பாபு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது ராம்பாபு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றிவருகிறார் சமீபகாலமாக அவர் மதுவுக்கு அடிமையானதாக தெரிகிறது, தினம் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வழக்கம்போல மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது, ஒரு கட்டத்தில் மோதல் முற்றியது, அதில் ஆத்திரமடைந்த ராம்பாபு மதுவெறியில் மனைவியின் கண்ணத்தை கடித்தார், அதில் வலி தாங்க முடியாமல் மனைவி அலறினார், அதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்தபெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் உடல் நலம்தேறியுள்ளார். அந்தப் பெண் தற்போது தனது கன்னத்தைக் கடித்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.