பாலியல் தொல்லை: வசமாக சிக்கிய அடுத்த பாதிரியார்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

By Raghupati R  |  First Published Mar 22, 2023, 1:57 PM IST

தென்காசி மாவட்டத்தில் பாதிரியார் ஸ்டான்லி குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் கிளம்ப காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்ட்ரோ. கிறிஸ்தவ பாதிரியாரான இவர் அழகியமண்டபம் அருகே பிலாங்காலையில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்தார். 

இவர் தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. பெனடிக்ட் ஆண்ட்ரோவால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வந்தனர்.

Tap to resize

Latest Videos

பாதிரியாரின் லேப்டாப்பை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தபோது அதில், 7க்கும்மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தன. இவற்றில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவற்றை கைப்பற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். மேலும் பாதிரியாரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க..பொதுமக்கள் கவனத்திற்கு.! உகாதியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை - முழு விபரம் இதோ

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள சர்ச்சில் போதகராக இருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்டான்லி குமார், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சபை மக்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க..இ சேவை மையம் தொடங்கி ஈசியா சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் உள்ளே !!

click me!