பரமக்குடியில் பயங்கரம்; நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் கொடூரமாக அடித்துக் கொலை

By Velmurugan s  |  First Published Mar 22, 2023, 1:30 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த இளைஞரை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தேவராஜ். இவர் சென்னை மேட்டுக்குப்பம் பகுதியில் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவ நாளான நேற்று தேவராஜ் கொலை வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராக பரமக்குடி வந்துள்ளார். 

நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு எம்ஜிஆர் நகரில் உள்ள தனது நண்பர் கோபி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தேவராஜ் உறவினரான பன்னீர் என்பவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். பணம் பெற்றுக் கொண்ட பன்னீர் அதை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால் அவருடைய காரை தேவராஜ் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

திருச்சியில் குரூப் ஸ்டடிக்காக சென்ற 12ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தாய், தந்தை கைது

இது குறித்து பன்னீர், தேவராஜிடம் அடிக்கடி காரை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தேவராஜ் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தேவராஜை பரமக்குடி எம்ஜிஆர் நகரில் உள்ள பன்னீர் உறவினர் முனீஸ்வரி இல்லத்திற்கு வரவழைத்து பேசி உள்ளனர். பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டு பன்னீர் அவரது உறவினர் தமிழ், வினித், ஆகியோர் தேவராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். 

மனைவியை பயம் காட்ட விளையாட்டாக நீரில் குதித்த நபர்; மனைவியின் கண் முன்னே உயிர் பிரிந்த சோகம்

இந்த தாக்குதல் சம்பவத்தில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பரமக்குடி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

click me!