தனி அறையில் அடைத்து சித்ரவதை; உணவுக்கு சாணத்தை கொடுத்து கொடூரம் - பெண் கதறல்

Published : Mar 22, 2023, 11:53 AM IST
தனி அறையில் அடைத்து சித்ரவதை; உணவுக்கு சாணத்தை கொடுத்து கொடூரம் - பெண் கதறல்

சுருக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை 3 நாட்கள் அறையில் அடைத்து வைத்தும், உணவுக்கு பதிலாக சாணத்தை கொடுத்து கொடுமை படுத்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவரது கணவர் விஜயபாண்டியன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் விஜயபாண்டியனும், மாமியார் மனோரஞ்சிதமும் சத்யாவை கொடுமைப்படுத்தியதாக ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கடந்த 10ம் தேதி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் கணவர் விஜயபாண்டியன், அவரது தாயார் மனோரஞ்சிதம் ஆகியோர் சத்யாவை தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இது தொடர்பாக சத்யா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் 3 நாட்கள் என்னை தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். 

சாப்பாட்டிற்கு பதிலாக சாணத்தை சாப்பிட சொல்லி கொடுமை படுத்தினர். வேறு ஒருவரோடு தொடர்பில் இருப்பதாக கூறினாள் உன்னை விட்டு விடுவதாக கூறி அடித்து சித்திரவதை செய்தனர். இதனால் நானும் அவர்கள் கூறியது போன்று கூறினேன். அதனை செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து எனது கணவர் விஜயபாண்டியன், அவரது தாய்மாமன் பரமசிவம், தாயார் மனோரஞ்சிதம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் நீ வாழ வேண்டும் என்றால் 12 லட்சம் பணம் தரவேண்டும்.

தோட்டத்தில் வேலை செய்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

மேலும் சிதம்பரத்தில் இருக்கும் வீடு மற்றும் 10 பவுன் நகையுடன் வந்தால் வாழலாம். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தால் உனது வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்று கூறி மிரட்டுகின்றனர். மேலும் எனக்கு சொந்தமான 20 சவரன் நகையை கொடுக்காமல் என்னை சித்திரவதை செய்வதாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சத்யாவின் கணவர் விஜயபாண்டியனை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தாயார் மனோரஞ்சிதம், தாய்மாமன் பரமசிவம், தர்மலிங்கம் ஆகியோரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

திருச்சியில் குரூப் ஸ்டடிக்காக சென்ற 12ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தாய், தந்தை கைது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி