திருச்சியில் குரூப் ஸ்டடிக்காக சென்ற 12ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தாய், தந்தை கைது

Published : Mar 22, 2023, 11:03 AM IST
திருச்சியில் குரூப் ஸ்டடிக்காக சென்ற 12ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தாய், தந்தை கைது

சுருக்கம்

திருச்சியில் குரூப் ஸ்டடிக்காக சென்ற 12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தோழியின் தாய், தந்தையை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாநகரை சேர்ந்தவர் சுரேஷ். பைனான்சியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழில்  செய்து வருகிறார். சுரேஷ்க்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகளுடன் சேர்ந்து படிப்பதற்காக 12ம் வகுப்பு மாணவி ஒருவர் இவரது வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது. அது போன்று தான் சம்பவத்தற்றும் அந்த மாணவி சுரேஷின் மகளை தேடி வீட்டுக்கு வந்துள்ளார். 

அப்போது அந்த மாணவியை சுரேஷ் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் சுரேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பலே கல்யாண ராமன் சென்னையில் கைது

சுரேஷ் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளுடன் சேர்ந்து படிப்பதற்காக வந்த பள்ளி மாணவியை சிறுமியின் பெற்றோர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம்! ரசித்த மற்றொரு பெண்.. CEO செய்த கொடூரம்
இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!