4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பலே கல்யாண ராமன் சென்னையில் கைது

Published : Mar 22, 2023, 08:30 AM IST
4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பலே கல்யாண ராமன் சென்னையில் கைது

சுருக்கம்

அடுத்தடுத்து 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பொறியாளரை கைது செய்த காவல் துறையினர் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் பொறியாளர் வினோத் ராஜ்குமார்.  இவரது தந்தை, தங்கைகள், என உறவினர்கள் சுமார் 10 பேருடன் சேர்ந்து ஏற்கனவே திருமண இணையதளங்கள் மூலம் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட வினோத் ராஜ்குமார் கல்யாண மன்னனாக வளம் வந்துள்ளார். 

இந்த நிலையில் மூன்றாவதாக தூத்துக்குடியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு விவாகரத்து பெற்ற பெண்ணை இணையதளம் வாயிலாக அறிமுகமாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கு கல்யாண மன்னன் வினோத் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை போன்று ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதும் தற்போது சென்னை பொதுப்பணி துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணை நான்காவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது. வினோத் ராஜ்குமாரின் கல்யாண லீலைகளைக் கண்டு அப்பெண் அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து வினோத் ராஜ்குமாருடன் தூத்துக்குடியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் தன்னை ஏன் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டீர்கள் என கேட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களினுடைய தொடர்பை துண்டித்து தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டும் கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தந்தை உயிரிழப்பு; மணமகனின் செயலால் நெகிழ்ச்சி

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோத் ராஜ்குமார் குறித்து வரதட்சனை கொடுமை,  தன்னை மோசடி செய்து ஏமாற்றியது உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வினோத் ராஜ்குமார் பலமுறை தொடர்பு கொண்ட போது ஆஜராகாமல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடியான நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பெயரில் தனிப்படை காவல் துறையினர் தூத்துக்குடியில் இருந்து  சென்னைக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த வினோத் ராஜ்குமாரை கைது செய்தனர்.  

கிருஷ்ணகிரியில் பயங்கரம்; மருமகனை படுகொலை செய்த மாமனார்: காதல் திருமணத்தால் அரங்கேறிய அவலம்

இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தனது குடும்ப உறுப்பினர்கள் 10 பேருடன் சேர்த்து மொத்தமாக 4 பெண்களை இதுபோன்று ஏமாற்றியுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வினோத் ராஜ்குமார் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!