தோட்டத்தில் வேலை செய்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

By Velmurugan s  |  First Published Mar 22, 2023, 11:29 AM IST

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பெரியசோரகை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் சீனிவாசன் (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் விக்னேஷ் (23). இருவரும் கூலி தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வாலிபர்கள் 2 பேரும் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

இதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக தகவல் அறிந்த ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காலவலர்கள் மூதாட்டியிடம் வாக்குமூலம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

திருச்சியில் குரூப் ஸ்டடிக்காக சென்ற 12ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தாய், தந்தை கைது

இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனிவாசன், விக்னேஷ் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார். மேலும் 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஆயுள் சிறை தண்டனை பெற்ற 2 பேரையும், காவல் துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பலே கல்யாண ராமன் சென்னையில் கைது

click me!