13 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக சீரழித்த 62 வயது கோயில் பூசாரி.. சரியான ஆப்பு வைத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம்.!

By vinoth kumar  |  First Published Nov 18, 2022, 9:16 AM IST

சென்னை துறைமுகம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (62). கோயில் பூசாரி. இவர், அதே பகுதியில் வசிக்கும் தம்பதியரின் 13 வயது சிறுமியை, கோயிலில் உள்ள சிறு பணிகளில் ஈடுபடுத்தி வந்துள்ளார். 


சென்னையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 62 வயது பூசாரி நடராஜனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை துறைமுகம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (62). கோயில் பூசாரி. இவர், அதே பகுதியில் வசிக்கும் தம்பதியரின் 13 வயது சிறுமியை, கோயிலில் உள்ள சிறு பணிகளில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதனால், அவருக்கு சாக்லெட், பணம் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். வழக்கம்போல் கோயில் வேலைக்கு வந்த போது  கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கோயிலுக்கு வந்த சிறுமியை நடராஜன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.. பாஜக நிர்வாகியை வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

இதனால், பயந்துபோன சிறுமி யாரிடம் கூறாமல் இருந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பூசாரி நடராஜன் அடிக்கடி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். நாளுக்கு நாளுக்கு இவரது தொல்லை அதிகரிக்கவே வேறு வழியில்லாமல்  சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூசாரி நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதுதொடர்பான வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதை அடுத்து  நடராஜனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  கணவருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசம்.. திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய இளம்பெண் கொலை.. வெளியான பகீர் தகவல்.!

click me!