வேலை கிடைத்ததற்காக ட்ரீட் வைத்த இளம் பெண்; தோழியையே விருந்தாக்கிய நண்பர்கள்

By Velmurugan s  |  First Published Jul 31, 2024, 10:41 PM IST

ஐதராபாத் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் நீண்ட கால ஆண் நண்பரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஐதராபாத் மாநிலத்தில் 24 வயதுடைய ஐடி பெண் ஊழியர் ஒருவர் தனக்கு வேலை கிடைத்ததை கொண்டாடும் வகையில், தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க நினைத்துள்ளார். இதற்காக வனஸ்தலிபுரத்தில் அமைந்துள்ள தனியார் உணவகத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு இளம்பெண், அவருடன் சிறுவயதில் இருந்து படித்து வந்த 1 பெண், 1 ஆண் நண்பர்கள் சேர்ந்து தேவையானவற்றை சாப்பிட்டுள்ளனர்.

Wayanad landslides: வயநாடு நிலச்சரிவு; பொதுமக்களிடம் உதவி கோரும் கேரளா அரசு 

Tap to resize

Latest Videos

undefined

பின்னர் அனைவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். குடி அதிகமானதால் நிதானம் இழந்ததை உணர்ந்து அருகில் இருந்த விடுதியில் அறை எடுத்து தங்குவதற்கு முடிவு செய்தனர். அதன்படி விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில், பார்ட்டி வைத்த இளம் பெண் நிதானம் இல்லாமல் இருப்பதை பயன்படுத்திக் கொண்ட ஆண் நண்பர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

உதயநிதியின் தூண்டுதலால் என் மீது அடுக்கடுக்காக பொய் வழக்கு - சவுக்கு சங்கர் ஆவேசம்

மேலும் அப்பகுதியில் இருந்த தனது நண்பர்களையும் அழைத்து இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து தனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை அறிந்து அப்பெண் அலறியுள்ளார். பின்னர் தனது சகோதரனுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நபர் இளம் பெண்ணை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!