Tirupati | வசூல் மன்னனிடமே ரூ.100 கோடி கைவரிசை காட்டிய தமிழக ஆசாமி!

By Dinesh TG  |  First Published Jul 31, 2024, 3:14 PM IST

திருப்பதி வெங்கடாஜலபதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையை பல ஆண்டுகளாக திருடி ரூ.100 கோடி அளவிற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் சொத்து சேர்த்துள்ளார். இந்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
 


உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமு் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் ஒவ்வொரு பக்தர்களும் சிறு தொகை முதல் கோடிக்கணக்கில் பணமாகவும், தங்கம், வெள்ளி, வைர வைடூரிய நகைகளாகவும், வெளிநாட்டு பணத்தையும் காணிக்கையாக திருப்படி உண்டியலில் செலுத்துகின்றனர்.

ஒரு நாளைக்கு ஒரு கோடி வசூல்

Latest Videos

undefined

கோயிலுக்கு வரும் பக்தர்களால் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை மட்டுமே கோடிக்கணகில் வரும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருப்படி உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் பல ஆண்டுகளாக காணிக்கைகளை திருடி ரூ.100 கோடி அளவிற்கு சொத்து சேர்த்த சம்பவம் தற்போது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

ஜீயர் மடம் டூ திருப்பதி தேவஸ்தானம்

தமிழகத்தை சேர்ந்த ரவிகுமார் என்பவர், முன்பு திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையிலும், நல்லெண்ணத்தில் அடிப்படையிலும் ரவிக்குமார், திருப்பதி உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பணியாளர்களில் ஒருவராக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது. திருப்பதியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு, உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பகுதியில் இருந்து வெளிவந்த ரவிக்குமாரை திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

டேட்டிங் மோசடியில் 28 லட்சம் பணத்தை இழந்த ஐ.டி. ஊழியர்! அதிகரிக்கும் Fake ID சைபர் குற்றங்கள்!

காணிக்கையை திருடிய ரவிக்குமார்
அப்போது, ரவிக்குமார் மலக்குடலில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பண முடிப்பை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல ஆண்டுகளாக திருப்பதி உண்டியல் காணிக்கையை திருடியதை ரவிக்குமார் ஒப்புக்கொண்டார். அந்த திருட்டு பணத்தை பயன்படுத்தியே ரவிக்குமார் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சொத்தில் ஒரு பகுதி நன்கொடையாக பெற்ற தேவஸ்தானம்
இவ்விவகாரம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, லோக் அதாலத் மூலம் தீர்வுகாண தேவஸ்தானம் எண்ணியது. அப்போது, ரவிக்குமாரின் சொத்தில் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக அளித்தது போல் எழுதி வாங்கியுள்ளனர். இதற்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி போதைப் பொருள் பறிமுதல் - தினகரன் கண்டனம்

2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த சம்பவம்

2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியே தெரியாமலிருந்த இந்த விவகாரம் குறித்து ஆந்திரபிரதேச மாநில மேல்சபை உறுப்பினர் ஒருவர், ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஆந்திரப்பிரதேச சட்ட மேல்சபையில் அமைச்சர் இந்த திருப்பதி உண்டியல் முறைகேடு விவகாரம் குறித்து பேசியதை தொடர்ந்து இவ்வளவு பெரிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

click me!