டேட்டிங் மோசடியில் 28 லட்சம் பணத்தை இழந்த ஐ.டி. ஊழியர்! அதிகரிக்கும் Fake ID சைபர் குற்றங்கள்!

By SG Balan  |  First Published Jul 30, 2024, 8:54 PM IST

பழகும் நபரின் நடத்தையில் ஏதாவது தவறாக உணர்ந்தால், உடனடியாக அந்த நபருடன் தொடர்பை முறித்துக்கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் அல்லது நேரில் சந்திக்க முடியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.


விசாகப்பட்டினத்தில் பொறியியல் பட்டதாரி ஒருவர் ஆன்லைன் டேட்டிங் மோசடியில் சிக்கி ரூ.28 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட, திருமணமாகாத மெக்கானிக்கல் இன்ஜினியர், டேட்டிங் தளத்தில் இருந்த போலி புரொஃபைலை நம்பி இந்த மோசடியில் சிக்கியுள்ளார்.

மோசடிக்காரர்கள் டேட்டிங் செயலியில் போலியான கணக்கு தொடங்கி நன்கு திட்டமிட்டு பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தெலுங்கானாவில் இருந்து செயல்படும் மோசடி ஆசாமிகள், தன்னிடம் சிக்குபவர்களின் உணர்ச்சிகளை பயன்படுத்திக்கொண்டு பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி பணத்தைப் அபேஸ் செய்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த கொம்மகோனி லோகேஷ் என்ற என்பவரை அடையாளம் கண்ட போலீசார், இன்னும் இரண்டு கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

ஆபாச வீடியோ பார்த்து தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்! தாயின் கண்முன்னே கொடூரக் கொலை!

"இந்த டேட்டிங் மோசடி என்பது இப்போது ட்ரெண்டாகியுள்ள புதிய வகை மோசடியாகும். இணைய மோசடி செய்பவர்கள் டேட்டிங் தளங்களில் கவர்ச்சியான பெண்களின் படத்தை பயன்படுத்தி போலியான சுயவிவரங்களை உருவாக்கி, ஆண்களை சிக்க வைக்கிறார்கள். நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமாகப் பேசிப் பழகுகிறார்கள்” என்று சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கிறது.

“பிறகு பணம் கேட்டு ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிடுகிறார்கள். பொய்களை அளந்துவிட்டு பணம் பறிப்பதைத் தவிர, தனிப்பட்ட தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதாகவும், இருவரும் நெருங்கிப் பழகி புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாகவும் அச்சுறுத்துகிறார்கள். அந்த கிரிமினல்களிடம் பெரிய தொகையை இழந்த பிறகுதான் எங்களுக்கு புகார்கள் வருகின்றன” என்றும் போலீசார் விளக்குகின்றனர்.

ஆன்லைன் டேட்டிங் மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி?

- மோசடி செய்பவர்கள் உங்களுடன் பேசும்போது ஒரு அவசர உணர்வை அடிக்கடி உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

- புரொஃபைல் படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம். ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் படத்தை ஆன்லைனில் சர்பார்க்கலாம். நம்பகத்தன்மை இல்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

- எந்தக் காரணமாக இருந்தாலும் ஆன்லைனில் மட்டுமே சந்தித்த ஒருவருக்கு பணத்தை அனுப்ப வேண்டாம். வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது முகவரி போன்றவற்றை பகிர்வதைத் தவிர்க்கவும்.

- பழகும் நபரின் நடத்தையில் ஏதாவது தவறாக உணர்ந்தால், உடனடியாக அந்த நபருடன் தொடர்பை முறித்துக்கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் அல்லது நேரில் சந்திக்க முடியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

- ஆன்லைன் மூலம் அறிமுகமானவரை நேரில் சந்திக்க முடிவு செய்தால், ஒரு பொது இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அதைப்பற்றி நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் சொல்லுங்கள்.

கடந்த 7ஆண்டுகளில் அதிக முறை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது கேரளா: மத்திய அரசு தகவல்

click me!