ஆடையில் சிறுநீர் கழித்த குழந்தை… பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியர்… அடுத்து நடந்தது என்ன?

Published : Sep 04, 2022, 09:16 PM IST
ஆடையில் சிறுநீர் கழித்த குழந்தை… பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியர்… அடுத்து நடந்தது என்ன?

சுருக்கம்

ஆடையில் சிறுநீர் கழித்ததாக அங்கன்வாடி ஆசிரியர் குழந்தையின் பிறப்புறுப்பில் சூடுவைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆடையில் சிறுநீர் கழித்ததாக அங்கன்வாடி ஆசிரியர் குழந்தையின் பிறப்புறுப்பில் சூடுவைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராஷ்மி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் 3 வயது குழந்தை தன் ஆடையில் சிறுநீர் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து ஆசிரியர் அந்த குழந்தையின் உதவியாளருடன் இணைந்து தீக்குச்சியால் குழந்தையின் பிறப்புறுப்பிலேயே சூடு வைத்துள்ளார். இதுக்குறித்து குழந்தையின் பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையும் படிங்க: மதுபான கடையில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சி… கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

அதன்பேரில் ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் பிரிவு 285 இன் கீழ் ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல்குமார் ஷஹாபுர்வாட் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆசிரியை ராஷ்மி குழந்தையின் பெற்றோரிடம் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிறுநீர் கழிக்கும் போது ஏற்பட்ட வயிற்று வலி.. ஆணுறுப்பை வெட்டிய அதிர்ச்சி சம்பவம் !

எனினும் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தையின் பெற்றோர் கடுமையான நடவடிக்கையை வலியுறுத்தியதன் பேரில், ஆசிரியை மீது காவல் துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். குழந்தையின் உடல் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், குழந்தையின் அந்தரங்க பாகங்கள் மற்றும் தொடைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து  விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு
வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி