மதுபான கடையில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சி… கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

Published : Sep 04, 2022, 05:18 PM IST
மதுபான கடையில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சி… கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

சுருக்கம்

திருவள்ளூர் அருகே அரசு மதுபான கடையில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் அருகே அரசு மதுபான கடையில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்தக் கடையின் விற்பனையாளர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். அவர் சென்றுவிட்டதை உறுதி செய்த கொள்ளையர்கள் மதுபான கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்தனர்.

இதையும் படிங்க: சிறுநீர் கழிக்கும் போது ஏற்பட்ட வயிற்று வலி.. ஆணுறுப்பை வெட்டிய அதிர்ச்சி சம்பவம் !

பின்னர் கடையில் இருந்து பணத்தை கொள்ளையடித்த அவர்கள் அங்கேயே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணிக்கு வந்த போலீசார் கடையில் துளையிட்டு மது அருந்திக்கொண்டிருந்தவர்களை கண்டுள்ளனர். இதை அடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிய வந்தது.

இதையும் படிங்க: பொது இடங்களில் Prank வீடியோ செய்ய தடை..! யூடியூப் சேனல்களுக்கு செக் வைத்த காவல்துறை

மேலும் அவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த ரொக்கத்தை திருடியதும் தெரியவந்தது. மேலும் மது பாட்டில்களையும், திருடி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கவரைப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!