"பாம்பின் தோலை சூடாக்கினால் கிடைக்கும் எண்ணெய்யை எடுத்துத் தடவினால் மூட்டு வலி குணமாகும் என்று யாரோ ஒருவர் கூறியதை அடுத்து பாம்பைச் சுட்டு முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவியதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தில் பாம்பை அடித்துக் கொன்று, அதன் தோலை உரித்து, இறைச்சியைச் சமைத்துச் சாப்பிட்டதாக இளைஞரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
30 வயதான ஜி. ராஜேஷ் குமார் என்ற நபர், பாம்பின் தோலை உரித்து இறைச்சியை சமைக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
undefined
இது குறித்து திருப்பத்தூர் வனக்காப்பாளர் கே.ஆர்.சோழராஜன் கூறுகையில், "பாம்பைக் கொன்று, இறைச்சியை சமைத்து சாப்பிடும் வீடியோவை, ஒருவர் வெளியிட்டதாக தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் அறிவுறுத்தலின் பேரில், அதிகாரிகள் விரைவாக விசாரித்து அந்த நபரை செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்தனர்" என்றார்.
வேற லெவல் ஸ்பீடு! சாட்டிலைட் இன்டர்நெட் சேவையைத் தொடங்க ஜியோவுக்கு அனுமதி!
மேலும், அந்த நபரிடம் விசாரித்தபோது பாம்பைக் கொன்று இறைச்சியை சமைத்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதாகவும் சோழராஜன் கூறினார். "பாம்பின் தோலை சூடாக்கினால் கிடைக்கும் எண்ணெய்யை எடுத்துத் தடவினால் மூட்டு வலி குணமாகும் என்று யாரோ ஒருவர் கூறியதை அடுத்து பாம்பைச் சுட்டு முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவியதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர் அவர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 9, 39, 50 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
ராஜேஷ் கொன்றது இந்திய எலிப் பாம்பு என்ற அரியவகை உயிரினம் ஆகும். இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் உள்ள அரியவகைப் பாம்புகளை விற்பதும் அடித்துத் துன்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ₹25,000 அபராதம் விதிக்கப்படலாம்.
ஒரு சொட்டு பெட்ரோல் கூட வேஸ்ட் ஆகாது! 150-160 cc பைக்கில் பக்கா மைலேஜ் கிங் பைக் எது தெரியுமா?