சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் தர்மா (23). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
சென்னையில் அண்ணனுக்கு பதிலாக அவரது தம்பியை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் தர்மா (23). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சுத்து போட்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே தர்மா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததை அடுத்து உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பினர்.
undefined
இதையும் படிங்க: கேப் கிடைக்கும் போதெல்லாம் மருமகனுடன் உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி! இறுதியில் நடந்தது என்ன?
இதுகுறித்து ஆர்.கே.நகர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த கொடூர கும்பல்.. ஆக்ஷனில் இறங்கிய சென்னை கமிஷனர்.!
அப்போது கொலையான தர்மாவின் அண்ணன் சூர்யா மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் சூர்யாவை போட்டுதள்ள வந்துள்ளனர். ஆனால் ஆள் மாறி அண்ணன் சூர்யாவுக்கு பதிலாக அவரது தம்பியை வெட்டிக்கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கொலை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.