Chennai Murder News: சென்னையில் பயங்கரம்.. நடுரோட்டில் வழக்கறிஞர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை!

By vinoth kumar  |  First Published Jun 12, 2024, 10:56 AM IST

சென்னை திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். 


சென்னையில் நடுரோட்டில் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 

சென்னை திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வழக்கறிஞர் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல் நடுரோட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: சின்ன பையன் கூட என்று பார்க்காமல் ஆண்ட்டி ஓயாமல் பாலியல் தொல்லை கொடுத்தாங்க! 28 வயது பெண் சிக்கியது எப்படி?

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். 

இதையும் படிங்க:  illegal Love Crime: மாமியார் மேல அவ்வளவு வெறியா? கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை.! மருமகன் கைது.!

இதனிடையே வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில்  கண்ணகி நகர் கமலேஷ், கொட்டிவாக்கம் நித்தியானந்த், பெரும்பாக்கம் பார்த்திபன் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

click me!